மனிதனின் அந்தரங்க உறவை புட்டு புட்டு வைக்கும் சர்வே முடிவுகள்..!

மனிதனின் அந்தரங்க உறவை புட்டு புட்டு வைக்கும் சர்வே முடிவுகள்..!

மனிதனின் அந்தரங்க உறவை புட்டு புட்டு வைக்கும் சர்வே முடிவுகள்..!
X

ஒரு நபர் தன்னுடைய வாழ்நாளில் சராசரியாக எத்தனை பேருடன் உறவு வைத்துக்கொள்கிறார் என்பது குறித்த எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் வெளியாகி பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளன.

ஒருவருடைய அந்தரங்க வாழ்க்கையை மற்றவர்கள் தெரிந்துகொண்டே வேண்டியது இல்லை என்பது உண்மை தான். ஆனால் மனித வாழ்க்கையில் நடக்கும் மாறுபாடுகளை அறிவியல் பார்வையுடன் அணுக வேண்டியுள்ளது. அதற்காக மனித வாழ்க்கையின் அந்தரங்கம் குறித்த சர்வே ஐக்கிய ஒன்றியத்தில் முன்னெடுக்கப்பட்டது. அதில் கிடைத்த முடிவுகளை குறித்து விரிவாக பார்க்கலாம்.

இங்கிலாந்தை சேர்ந்த யூரோகிளிக்ஸ் என்கிற நிறுவனம் ஐக்கிய ஒன்றியத்தைச் சேர்ந்த இரண்டாயிரம் நபர்களிடம் அவர்களுடைய அந்தரங்க விஷயங்கள் குறித்த சர்வேயை முன்னெடுத்தது. அதில் 25 சதவீத மக்கள் தங்களுடைய வாழ்நாளில் 2 முதல் 4 பேருடன் உறவு வைத்துக் கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், 14 சதவீத மக்கள் தங்களுடைய வாழ்நாளில் ஒருவருடன் மட்டுமே தொடர்ந்து உறவு கொண்டு வருகின்றனர். மேலும் இரண்டு சதவீதத்தினர் கிட்டத்தட்ட 91 நபர்களுடன் வேறு வேறு தருணங்களில் உறவு வைத்துக்கொண்டுள்ளனர். தொடர்ந்து நான்கு சதவீதத்தினருக்கு இதுவரை எத்தனை பேருடன் அவர்கள் உறவு கொண்டனர் என்பது தெரியவில்லை.

இந்த சர்வே முடிவுகளை உன்னிப்பாக கவனித்தால், வேறு வேறு நபர்களுடன் உறவு கொள்பவர்களில் பெரும்பாலானோர் லண்டன் வாசிகளாக இருக்கின்றனர். இவர்களில் 5 சதவீதத்தினர் தங்களுடைய வாழ்நாளில் குறைந்தது 91 நபர்களுடன் உறவு கொண்டுள்ளனர்.

இதில் மூன்று சதவீதம் மக்கள் 35 வயது முதல் 44 வயதுக்குட்பட்டோர்களாக உள்ளனர். எனினும், பலரும் புதிய நபர்களுடன் பாலியல் உறவு கொள்ளும் போது மிகவும் எச்சரிக்கையுடனே இருந்துள்ளனர். முறையான பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றியுள்ளது இந்த சர்வே முடிவில் தெரியவந்துள்ளது.


Tags:
Next Story
Share it