அதிர்ச்சி! கொரோனாவுக்கு மேலும் ஒரு அமைச்சர் பலி!
அதிர்ச்சி! கொரோனாவுக்கு மேலும் ஒரு அமைச்சர் பலி!

பீகாரில் கொரோனாவுக்கு மேலும் ஒரு அமைச்சர் உயிரிழந்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடிய கொரோ வரைஸ் நோயானா கொரோனா உலகம் முழுவதும் பரவி, அப்பாவி மக்கள் முதல் அமைச்சர்கள் வரை பலரையும் பலி வாங்கிவருகிறது. இதனால், இந்த வைரஸ் நோயில் இருந்து தப்பிக்க முடியாமல் உலகமே தவித்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் காரணமாக மக்கள் பிரதிநிதிகள் பலர் பலியாகியுள்ளனர்.
நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக இதுவரை மொத்தம் 74 லட்சத்து 30 ஆயிரத்து 635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா நோய் தாக்கம் காரணமாக ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் அமைச்சரவையில் இடம் பெற்ற ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சருமான கபில் தியோ காமத் (70) கொரோனா வைரஸ் நோயிக்கு பலியாகி உள்ளார். கடந்த 1-ம் தேதி முதல் கொரானா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் பீகாரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அமைச்சர் கபில் தியோ காமத் மரணம் அடைந்தார்.
ஏற்கனவே, பீகாரில் கடந்த 12-ம் தேதி வினோத்குமார் கொரோனாவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.