1. Home
  2. லைப்ஸ்டைல்

ஆண்மை இல்லாத ஒரு மனிதனை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது? ஆண்மை காக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள்!

ஆண்மை இல்லாத ஒரு மனிதனை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது? ஆண்மை காக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள்!


தாய்மை பற்றிப் பேசும் நாம் ஆண்களுக்கு ஏற்படும் குழந்தைப் பேறு இன்மை பற்றிப் பெரிதாகப் பேசுவதில்லை. இன்றைக்கு ஆண்மை என்பது குழந்தைப் பேறோடு சம்பந்தப்பட்டது என்று ஆகிவிட்டது. ஆண்மை என்றால் என்ன? ஆண்மைக்கு அளவுகோல் உண்டா? ஆண்மை இல்லாத ஒரு மனிதனை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது? ஒரு ஆணால் குழந்தை பெற்றுத்தர முடியவில்லை என்றால் அவனை என்னவென்று சொல்வது?

ஆண்மைக்குறை ஏற்படுவதற்கு இன்றைய உணவு முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், வேலைச்சூழல் என நீண்ட நெடியதொரு பட்டியலிடப்படுகிறது. அதுசரி ஆண்மைக் குறையைச் சரிசெய்ய முடியுமா? இந்தக் கேள்வி தேவையான ஒன்று. இது பல இடங்களில் இன்றைக்கு விவாதப்பொருளாக ஆகியிருக்கும் சூழலில் இந்த ஆண்மைக்குறையை வைத்து காசு பார்க்கும் மருத்துவர்கள் புற்றீசல்போலக் கிளம்பியிருக்கிறார்கள். ஆண்மை, ஆண்மைக்குறை பற்றிப் பேசுவதற்கு முன் காமம் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். செக்ஸ் பற்றிய புரிதல் தேவையாக இருக்கிறது.

உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நினைத்துத் தவம் இருந்த மகாயோகி விஸ்வாமித்திரரின் முன் அழகுப் பதுமையான மேனகை வந்து நின்றதும் அவர் தவத்தைக் கலைத்துவிட்டு அவளுடன் காதல் வசப்பட்டார். காமம் கண்ணை மறைக்க அதை எதிர்கொள்ள முடியாத ஒரு நிலைக்கு அவர் தள்ளப்பட்டார், இது சரித்திரம்.

காம சக்தியை எந்த ஓர் உயிராலும் கட்டுப்படுத்த முடியாது. இயற்கையாக எழும் காமத்தை தவறாகச் சித்தரித்து, அதை அடக்க வேண்டும் என்றும், காமம் ஒரு பாவம் என்பது போன்றும் விஷமத்தனமான பரப்புரைகள் மனிதர்களிடையே திட்டமிட்டு விதைக்கப்பட்டு வருகின்றன. உண்மையில் காமம் என்பது மகிழ்ச்சி தரும் ஓர் உன்னத அனுபவம் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். மாறாகப் பயந்து பயந்து அதை அனுபவிக்கக்கூடாது. ஆனால் இன்றைக்குப் பலரிடம் காம சக்தி குறைந்து காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆண்மைத்தன்மை குறைந்து அவதிப்படுகிறார்கள். இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் மருத்துவர்கள் பலர் அதைப் பணம் கொழிக்கும் வியாபாரமாக்கி கோடி கோடியாகக் குவித்து வருகிறார்கள்.

ஆண்மையைத் தூண்டும் எண்ணற்ற மூலிகைகள் இருக்கும்போது தேவையில்லாமல் காசு பணத்தை ஏன் நாம் விரயமாக்க வேண்டும்.பாலுணர்வைத்தூண்டும், நீர்த்துப்போன விந்து கெட்டிப்படச் செய்யும், நீண்டநேரம் செக்ஸ் உறவில் ஈடுபட வைக்கும் அந்த அற்புத மூலிகைகளைப் பார்ப்போமா?

வெங்காயம்:

ஆண்மை இல்லாத ஒரு மனிதனை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது? ஆண்மை காக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள்!

வெங்காயம் ஆண்மையை அதிகரிக்கச் செய்வதுடன் இனப்பெருக்க உறுப்புகளை வலுப்படுத்தும். ஆண் உறுப்பில் விரைப்புத் தன்மை ஏற்படாமல் துன்பப்படுபவர்களுக்கு வெங்காயம் ஓர் அருமருந்து. வெங்காயத்தில் எல்லா வகை வெங்காயமும் நல்லதுதான் என்றாலும் வெள்ளை வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் நிச்சயம் அதன் பலன் தெரியும். சாலட் ஆகவோ சைட் டிஷ் ஆகவோ செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.

பூண்டு:

மிகச் சாதாரணமாக உணவில் பயன்படுத்தப்படும் பூண்டு... வெள்ளைப்பூண்டு என்று அறியப்படும் அந்தப் பூண்டு பக்க விளைவில்லாத ஒரு பாலுணர்வு தூண்டி என்பது நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்? ஆண்மைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட, விரைப்புத் தன்மையைப் பராமரிக்க முடியாதவர்களுக்கு ஒரு டானிக்காகச் செயல்படுகிறது. தினம் இரண்டு அல்லது மூன்று பூண்டுப் பற்களை வேக வைத்துச் சாப்பிடலாம். பச்சையாகவும்கூடச் சாப்பிடலாம்.

கேரட்

ஆண்மை இல்லாத ஒரு மனிதனை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது? ஆண்மை காக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள்!

சோர்வு அல்லது முன்கூட்டியே விந்து வருபவர்களுக்குச் சரியான தீர்வைத் தரும். முட்டைகளுடன் கேரட் சேர்த்துச் சாப்பிடுவதால் ஒரு புதுமையான பாலியல் அனுபவத்தை நமக்குக் கொடுக்கும். 150 கிராம் கேரட்டை நன்றாகத் துருவி நன்றாக வேக வைத்த முட்டையில் அரைப் பங்கு எடுத்துச் சேர்க்க வேண்டும். அதனுடன் சிறிது தேன் சேர்த்து தினம் ஒன்று என ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் சாப்பிட்டால் போதும்.

வெண்டைக்காய்

ஆண்மை இல்லாத ஒரு மனிதனை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது? ஆண்மை காக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள்!

வெண்டைக்காயில் வெண்டைச் செடியின் வேர்கள் தான் பாலியல் கோளாறுகளுக்கு உதவுகிறது. ஆயுர்வேத மருத்துவக் கூற்றுப்படி, வெண்டையின் வேர்கள் பாலியல் வீரியம் இழந்தவர்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகும். ஒரு டம்ளர் பாலில் 5 அல்லது 10 கிராம் வெண்டை வேரின் தூளை சேர்த்துச் சாப்பிடவும். இதைத் தினமும் குடித்து வரவும். விரைவில் வித்தியாசம் தெரியும்.

தண்ணீர்விட்டான் கிழங்கு

சதாவேரி என்ற பெயரிலும் அழைக்கப்படும் இதன் உலர்ந்த வேர், முன்கூட்டி விந்துவருதல் மற்றும் பல்வேறு பாலியல் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மருந்து. ஒரு டம்ளர் பாலில் 15 கிராம் வேர்ப்பொடியைச் சேர்த்துக் கொதிக்க வைத்து காலை மாலை எனக் காபி குடிப்பதுபோல் குடித்தால் பலன் கிடைக்கும்.

முருங்கைக்காய்

இது மிகவும் சக்திவாய்ந்த பாலுணர்வு தூண்டியாகும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையைப் போக்கக்கூடியதாகும். முருங்கை மரத்தின் உலர்ந்த பட்டை ஆண்மைக்குறைவு, முன்கூட்டி விந்துதள்ளல் மற்றும் விந்துக்குறைபாடு போன்ற பிரச்னைகளில் இருந்து விடுவிக்கும்.

ஆண்மை இல்லாத ஒரு மனிதனை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது? ஆண்மை காக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள்!

150 கிராம் உலர்ந்த முருங்கை மரத்தின் பட்டைத் தூளை அரை லிட்டர் நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். சுமார் அரை மணி நேரம் கொதித்ததும் தேவையான அளவு எடுத்து ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துக் குடிக்கலாம். ஒரு நாளைக்கு மூன்று முறை என மூன்று மாதங்கள் குடிக்க வேண்டும். முருங்கைப்பூ 15 கிராம், பால் 250 மில்லி பால் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடித்தாலும் பலன் கிடைக்கும்.

- தமிழ்க்குமரன், மூலிகை ஆராய்ச்சியாளர்

Trending News

Latest News

You May Like