கொரோனாவை கண்டால் குறுஞ்செய்தி.. நவீன முகக் கவசம் கண்டுபிடிப்பு..!

கொரோனாவை கண்டால் குறுஞ்செய்தி.. நவீன முகக் கவசம் கண்டுபிடிப்பு..!
X

சீனாவில், கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளை கடந்தும் முற்றாக அழியாமல் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் கவசமாக முகக்கவசம் இருந்து வருகிறது.

இந்த நிலையில், காற்றில் கொரோனா வைரஸ் கலந்திருந்தால் அதை குறுஞ்செய்தி மூலம் அணிந்திருப்பவருக்கு காட்டிக் கொடுக்கும் வகையில் நவீன முகக் கவசத்தை சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள டோங்ஜி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நவீன முகக் கவசத்தை ஒருவர் அணிந்து கொண்டு வெளியில் செல்லும் போது, அவரைச் சுற்றிலும் இருக்கும் காற்றில் சாதாரண வைரஸ் முதல் கொரோனா வைரஸ் வரை எந்த வகையான வைரஸ் கலந்திருந்தாலும் அதனை கண்டறிந்து, அணிந்திருப்பவரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி எச்சரிக்கும் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, முகக் கவசத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான யின் பாங் கூறுகையில், "முகக் கவசம் அணிவது நோய் பரவும் அபாயத்தை குறைக்கும் என்று முந்தைய ஆராய்ச்சி காட்டுகிறது. எனவே, காற்றில் வைரஸ் இருப்பதைக் கண்டறிந்து, அணிபவரை எச்சரிக்கும் முகக் கவசத்தை உருவாக்க விரும்பினோம்.

எங்கள் முகக் கவசமானது காற்றோட்டம் குறைவாக உள்ள இடங்களில், அதாவது 'லிப்ட்' அல்லது மூடிய அறைகள் போன்ற நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள இடங்களில் நன்றாக வேலை செய்யும்" எனக் கூறினார்.

Next Story
Share it