மாதவிடாய் நாட்களில் இதை மறந்தும் செய்யதீங்க..!!
மாதவிடாய் நாட்களில் செய்யக்கூடாத தவறுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- உங்களுடைய மாதவிடாய் சுழற்சி உங்கள் சராசரி நாட்களின் அடிப்படையில் ஏற்படுகிறதா என்பதை அவசியமாக கண்காணிக்க வேண்டும். இது உங்களுடைய கருவுறும் தன்மையை உறுதிப்படுத்துகிறது. மேலும், மாதவிடாய் தாமதமாவதால் வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா என்பதையும் கண்டறிய உதவும்.
- உங்களுக்கு ரத்த போக்கு அதிகமாக இருந்தாலும் அல்லது குறைவாக இருந்தாலும் சரி, நீங்கள் 4 மணி நேரத்துக்கு ஒரு முறை பேடு மாற்றுவது மிகவும் அவசியம். இதனால் உங்களுக்கு அலர்ஜி மற்றும் தொற்று ஏற்படாமல் இருக்கும்.
- மாதவிடாய் காலத்தில் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு இருப்பதால் உங்கள் சருமம் மிகவும் சென்சிட்டிவாக இருக்கும். எனவே பீரியட்ஸ் சமயத்தில் வாக்சிங் செய்வதை தவிர்க்க வேண்டும்.
- மாதவிடாய் காலத்தில் ரத்தபோக்கின் ஸ்மெல்லைத் தடுக்க பலரும் வாசனை திரவியங்கள் அல்லது நறுமணமிக்க தயாரிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதில் இருக்கும் கெமிக்கல்கள் பிறப்புறுப்பில் சென்சிடிவ் பகுதியை பாதிக்கும்.
- ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, மன நிலையில் அடக்கடி மாற்றங்கள், எரிச்சல், கோபம் என்று அனைத்துமே மாதவிடாய் நாட்களில் உங்களை பாதிக்கும். எனவே, நல்ல தூக்கம் அவசியம்.
- மாதவிடாய் நாட்களின் போது நிறைய காஃபி குடிப்பதை பழக்கமாக வைத்திருப்பார்கள். அதைத் தவிர்க்க வேண்டும். காஃபீன் உடலின் நீர்ச்சத்தை குறைப்பதோடு, பீரியட்ஸ் வலியையும் அதிகரிக்கும். இதைத் தவிர்த்து, மாதவிடாய் நாட்களில் ஜன்க் உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.