உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் மஞ்சள் தண்ணீர்!
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் மஞ்சள் தண்ணீர்!

உலகம் முழுவதும் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது. உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் பாரம்பரியத்தை பின்பற்றத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் அன்றாட உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டியவைகளில் மஞ்சள் முதலிடத்தில் உள்ளது.
மஞ்சளில் ஏராளமான மருத்துவ பண்புகள் இருப்பது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் ஆரோக்கியத்தை நிலைநிறுத்த உதவி புரிவதோடு குறைபாடு பிரச்சனைகளையும் எதிர்த்துப் போராடும் திறன் உடையது.
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது மஞ்சள் தூள் கலந்து சூடு ஆறும் முன்னே காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வர பல்வேறு விதமான நன்மைகள் உடலில் உருவாவதை உணர முடியும்.
சர்க்கரை நோயை தடுக்க வல்லது. மஞ்சள் கலந்த நீரை ஒருவாரம் தொடர்ந்து குடித்து வரும் போது, மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஒரு நல்ல மருந்தாக செயல்படும்.
இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களை இரத்தம் உறைவதில் இருந்து விடுவித்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.ஆர்த்ரைடீஸ் பிரச்சனையை நீக்கும்.
மஞ்சள் நீர் நிச்சயமாக கல்லீரலை நச்சு சேதத்திலிருந்து பாதுகாத்து சேதமடைந்த செல்களை மீண்டும் உருவாக்க உதவுகிறது. தினமும் மஞ்சள் கலந்த நீரைக் குடிப்பதால், அது செரிமானத்தை மேம்படுத்தும் .