ஏப்ரல் 7ல் உலக சுகாதார தினம்! அனைவருக்கும் ஆரோக்கியம் என்பதே குறிக்கோள்!
ஏப்ரல் 7ல் உலக சுகாதார தினம்! அனைவருக்கும் ஆரோக்கியம் என்பதே குறிக்கோள்!

உலகம் முழுவதும் கொரோனா, மக்களை கொன்று குவித்து வருகிறது. உலக மக்கள் கொரோனாவிற்கு எதிராக செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இப்படி முன்பொரு காலத்தில் பெரியம்மை நோய் தலைவிரித்தாடிய போது உருவானது தான் உலக சுகாதார தினம்.
1948ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி ஜெனிவாவில் உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation) தொடங்கப்பட்டது. அனைவருக்கும் ஆரோக்கியம் என்பதே உலக சுகாதார நிறுவனத்தின் முக்கியமான குறிக்கோள்.
1950-ம் ஆண்டு முதன்முறையாக ‘உங்கள் உடல்நல சேவைகளை அறிந்து கொள்ளுங்கள்’ என்ற தீர்மானத்தோடு ஏப்ரல் 7ம் தேதி ஒவ்வொரு வருடமும் உலக சுகாதார தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 61 நாடுகள் கையெழுத்திட்டன. இப்போது 194 நாடுகள் இந்த அமைப்பில் இணைந்துள்ளன.
பெரியம்மையைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் தொடங்கி, தற்போது எய்ட்ஸ், மலேரியா, காசநோய், பிற நோய்த் தொற்றுக்களைத் தடுப்பதிலும், தீர்வு காண்பதிலும் தமது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இது தவிர வேர்ல்டு ஹெல்த் ரிப்போர்ட் என்ற முண்ணனி இதழையும் இந்த அமைப்பு வெளியிட்டு வருகிறது.