1. Home
  2. ஆரோக்கியம்

மகிழ்ச்சிக்கு இசையையும் யோகாவையும் நாடுவது ஏன்?

மகிழ்ச்சிக்கு இசையையும் யோகாவையும் நாடுவது ஏன்?

பரபரப்பும் சுறுசுறுப்பும் நிறைந்த இந்த அவசர உலகத்தில் மக்கள் மனதில் பாதி நேரம் தோன்றும் மைண்ட் வாய்ஸ்...

"மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!"

எல்லோருடைய நேரத்தையும் நிறுவனங்கள், கேளிக்கைகள், செல்போன்கள் விழுங்கிவிட்ட நிலையில், மனதிற்கு ஏது ரிலாக்ஸ் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. ரொம்ப யோசிக்க வேண்டாம். உங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்டுக்கொண்டே மேலும் படிக்கத் தொடருங்கள், உங்கள் மனது ரிலாக்ஸாகக் கூடும்.

ஆம், நம் மன உளைச்சலைப் போக்கும் எளிய அருமருந்து இசைதான். இசையின் மகத்துவத்தை உணர்ந்ததாலோ என்னவோ 1981 ஆம் ஆண்டு முதலே பிரான்ஸ் நாட்டில், இசை எல்லா மக்களுக்கும் போய் சேர வேண்டும் என்ற எண்ணத்தில், ஜூன் 21-ம் தேதி "சர்வதேச இசை தினம்" என்று கொண்டாடப்பட்டது.

இந்தத் தினத்தன்று வளரும் மற்றும் வளர்ந்த கலைஞர்கள் இலவசமாக தெருக்களில் கச்சேரி செய்து பிறருக்கு இசையை வழங்கி, அவர்கள் எண்ணத்திலும் இசை மீது ஆர்வத்தை உருவாக்கினர். "எல்லாத் திசையிலும் இசை" என்பதே இந்த நாள் கொண்டாடப்படுவதின் முக்கிய நோக்கமாக இருந்தது. மெல்ல மெல்ல இது எல்லா நாடுகளுக்கும் பரவி தற்போது சுமார் 120 நாடுகளில் ஜூன் 21-ம் தேதி சர்வதேச இசை தினமாக கொண்டாடப்படுகிறது.

இசையின் மகிமை

ஜெர்மன் தம்பதியரின் வாழ்க்கை வரலாற்றில் இசையோடு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஜெர்மன் தாயின் வயிற்றில் வளர்ந்த குழந்தை 9 மாதம் ஆகியும் எந்த அசைவும் காட்டவில்லை. குழந்தை வயிற்றுக்குள் உயிருடன் இருந்தாலும் எந்தவித அசைவும் காட்டாததால் மருத்துவர்கள் அனைவரும் கைவிரிக்க, ஜெர்மன் தம்பதியர் செய்வதறியாது திகைத்தனர்.

தற்செயலாக இவர்கள் இளையராஜா இசையமைத்த திருவாசகம் பாடலை கேட்க, தாய் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை அசைவதை உணர்ந்தனர். பலமுறை பரிசோதித்தும் பார்த்தனர். பாட்டு கேட்கும் போதெல்லாம் குழந்தை அசைந்தது. அன்று முதல் திருவாசகத்தைக் கேட்டுக்கொண்டே இருக்க அந்த பெண்மணி சுகப் பிரசவத்தில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தாள். மருத்துவ உலகில் இசையால் பிறந்த இந்த குழந்தையை மெடிக்கல் மிராக்கிள் என்றுதான் சொல்கிறார்கள். இசையின் சில பலன்கள் இதோ:

* கருவில் இருக்கும்போது இசைக்கு அறிமுகமான குழந்தைகள் மிகுந்த கவன சக்தியைக் கொண்டிருப்பார்கள் என்று ஆய்வு சொல்கிறது.

* இசையை ரசிக்கும்போது மகிழ்ச்சிக்கு தேவையான டோப்பமைன் மூளையில் சுரப்பதால் நம் மனது ரிலாக்ஸாகி நாம் மகிழ்ச்சியில் திளைக்கிறோம்.

* இரவு நேர தூக்கத்திற்கு முன்பு மெல்லிய இசையை கேட்கும்போது நிறைவான தூக்கம் வரும் என்பது உறுதி.

* ஆய்வின் கூற்றுப்படி, மெல்லிய லைட்டிங்கும் இசையும் உணவை ரசித்து சாப்பிடத் தூண்டும். மேலும் இது குறைவாகவும் சாப்பிட வைக்கும். அதனாலேயே ஹோட்டல்களில் அந்த செட்டப் அமைக்கப்படுகின்றன. டயட்டில் இருக்க முயற்சிப்பவர்கள் இந்த முறையை சோதித்துப் பார்க்கலாம்.

* 4-6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 90% பேர் இசைப் பயிற்சி மேற்கொண்ட ஒரு மாதத்திற்குள்ளாக பேச்சுத்திறனில் நல்ல முன்னேற்றம் காண்பித்தனர்.

* இசைப் பயிற்சி குழந்தைகள் மத்தியில் சிறந்த ஐ.க்யூ (IQ) என்படும் அறிவுத் திறனையும், கல்வியில் மேன்மையையும் ஏற்படுத்தும் சக்தி கொண்டது.

* இசை அனைத்து விதமான நோய்களுக்கும் ஒரு சிறந்த வலி நிவாரணியாக செயல்படும் வல்லமை கொண்டது.

நல்ல இசையை ரசித்து நம் மனதை எப்போதும் ரிலாக்ஸாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க முயற்சிப்போம்.

மனதை ரிலாக்ஸாக வைத்திருந்தால் மட்டும் போதுமா? உடலை ரிலாக்ஸ் செய்வது எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள். ஒரே சிறந்த தீர்வு யோகாதான். 2014-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினம் என்று ஐ.நா. சபை அறிவித்ததில் இருந்து யோகாவை பற்றிய விழிப்புணர்ச்சி மக்கள் மத்தியில் நிறையவே ஏற்பட்டுள்ளது.

இசையும் யோகாவும் மனதையும் உடலையும் ஃபிட்டாக வைக்க சிறந்த மருந்தாகும். இந்த ஜோடி பல நோய்களை குணமாக்கும் வல்லமை பெற்றது. இசையும் யோகாவும் சந்தித்த இந்த நாளைக் கொண்டாடி ஆரோக்கியமான வாழ்வை ஏற்படுத்த முனைவோம்.

newstm.in

Trending News

Latest News

You May Like