1. Home
  2. ஆரோக்கியம்

கர்ப்பிணி பெண்கள் 8வது மாதத்திலிருந்தே சீரகத் தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்த வேண்டும் - ஏன் தெரியுமா ?

1

12 - 24 மாதங்கள் வரை குழந்தைக்கு தாய் பால் கொடுப்பதால், பச்சிளம் குழந்தையின் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், இயற்கை முறையில் அனைத்து சத்துக்குளும் அதற்கு கிடைக்கிறது. ஆனால், இன்றைய தலைமுறை பெண்கள் பலருக்கும் தாய் பால் சுரப்பதில் பெரும் பிரச்னை காணப்படுகிறது. 

துரத உணவுப் பழக்கம், சத்தில்லாத உணவு வகைகளை உட்கொள்ளுதல், சரியான துாக்கமின்மை, மன அழுத்தம், வேலைக்கு போகும் பெண்களாக இருந்தால், அதிக வேலைப் பளு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அவர்களில் ஏற்படும் ஹார்மாேன் மாற்றம் சரியான விகிதத்தில் நடைபெறாமல் போகிறது. 

இதன் காரணமாக, பால் சுரப்பில் பிரச்னை ஏற்படுவதுடன், சிலருக்கு பால் சுரக்காமலேயே போகிறது. மேலும் சிலருக்கு மிக விரைவிலேயே பால் சுரப்பு நின்று விடுகிறது. இதனால், தாய், சேய் இருவருக்கும் பல நேரடி, மறைமுக பிரச்னைகள் ஏற்படுகின்றன. இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண, நம் முன்னாேர்கள் சொன்ன எளிய வீட்டு உணவுப் பொருட்களை பயன்படுத்தி, பால் சுரப்பை அதிகப்படுத்தலாம். 

சீரகம்: அகத்தை சீர் படுத்துவதாலேயே இதற்கு சீரகம் என பெயர் வைத்துள்ளனர். உணவில் சீரகத்தை சேர்த்துக் கொள்வதுடன், தினமும், சிறிதளவு சீரகத்தை நீரில் போட்டு மாெட்டு கொதி வரும் வரை நீரை சூடாக்கி அதை இளம் சூட்டிலோ அல்லது ஆறிய பிறகோ அருந்தலாம். 

தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்!

இது போல், ஒரு நாளைக்கு, குறைந்தது 2 - 3 லிட்டர் சீரக தண்ணீர் குடித்து வந்தால், பாலுாட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கும். பால் சுரப்பதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் அதற்கு தீர்வு கிடைக்கும். கர்ப்பிணி பெண்கள் 8வது மாதத்திலிருந்தே சீரகத் தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்தி கொள்ளலாம். 

பூண்டு: நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பூண்டு, பெண்களின் ஹார்மோன் சமநிலைக்கு மிக உதவியாக உள்ளது. பூண்டு ரசம், பூண்டு போட்ட குழம்பு உள்ளிட்டவற்றை செய்து, அதில் அதிக அளவு பூண்டை சேர்த்து அதை பாலுாட்டும் தாய்மார்கள் உட்கொண்டால், பால் சுரப்பு அதிகரிக்கும். 

சூடான பாலில் பூண்டு பற்களை போட்டு, அதிலேயே பூண்டை வேகவைத்து, அந்த பாலுடன் பூண்டையும் சேர்த்து உண்பதால், பால் சுரப்பு அதிகரிக்கும். 

அதே போல் தினமும் இரவு உறங்க செல்வதற்கு முன், பால் சாதம் சாப்பிடுவது நல்ல பலன் கொடுக்கம். காபி, டீ குடிப்பதை தவிர்த்து, அதற்கு பதிலாக நல்ல பசும்பாலை அருந்தினால், அதுவும் பால் சுரப்புக்கு கை கொடுக்கும். இரவில் தயிர், மாேர் சாதத்திற்கு பதில் பால் சாதம் சாப்பிடுவது சாலச்சிறந்தது. 

மேற்கண்ட முறைகள் யாருக்கும் எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாமல் இயற்கை முறையில் பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் என்பதால், அனைத்து வயது பாலுாட்டும் பெண்களும், கர்ப்பிணிகளும் இதை முயற்சித்து பார்த்து பலன் அடையலாம். 

Trending News

Latest News

You May Like