1. Home
  2. லைப்ஸ்டைல்

ஏன் பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கிறார்கள்?

ஏன் பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கிறார்கள்?


தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால் பலன்கள் கிடைக்கும்னு தெரிஞ்சுக்கிட்டீங்க… என்னென்ன கிழமைகளில் ஆண்களும், எந்தெந்த கிழமைகளும் பெண்களும் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், எந்த கிழமைகளில் எண்ணெய் குளியலைத் தவிர்க்க வேண்டும் என்பது பற்றி தெரியுமா?

எண்ணெய் குளியலுக்கு என குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எண்ணெய் குளியல் என்பது வெறும் உடல் நலத்திற்கு மட்டுமானது கிடையாது. கிரகங்களின் சுழற்சி, பூமியை வந்தடையும் சூரிய கதிர்களின் வீச்சு என்று அறிவியலும் இதனுடன் தொடர்புடையது.

எண்ணெய் குளியலைப் பற்றி ‘அறப்பளீசுர சதகம்’ என்கிற நூல் விரிவாகச் சொல்கிறது.

பெண்கள் பொதுவாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். செவ்வாய்கிழமையும், வெள்ளிக்கிழமையும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் செல்வம் சேரும் என்கிறது ‘அறப்பளீசுர சதகம்’ நூல். விடுமுறை தினம் என்பதற்காக ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுக்க கூடாது. ஞாயிறன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் வடிவமும், அழகும் போய்விடும் என்றும் அந்நூல் எச்சரிக்கிறது.

ஆண்கள் புதன், சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.

புதன் அறிவையும், சனி ஆயுளையும், உடல் நலத்தையும் தருவதால், ஆண்களை புதன், சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்லி வைத்தார்கள்.

முக்கியமாக, குளிர் காலம், கோடைக்காலம் என்றில்லாமல் எந்த காலங்களானாலும், எப்பொழுதுமே வெது வெதுப்பான வெந்நீரில் தான் எண்ணெய் தேய்த்தால் குளிக்க வேண்டும். குளிர்ந்த நீரில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு குளித்தால் நரம்புகள் பலவீனமடையும் என்றும் எச்சரிக்கை செய்கிறார்கள். ஆரோக்கியத்துடன், எண்ணெய் குளியல் மன அழுத்தத்தையும் குறைக்கிறது. எண்ணெய் தேய்ப்பதால், சருமத்தில் எண்ணெய்ப் பசை உருவாகும். சருமத்தில் எண்ணெய் பசை இருந்தால்தான் சூரியனிலிருந்து வரும் வைட்டமின் டி சத்தை உடல் கிரகிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

வாரம் இருமுறை குளிப்பதன் மூலம் சருமம் நல்ல பொலிவைப் பெறும். மன அமைதி கிடைக்கும். கண்களும், உடலும் குளிர்ச்சியடையும். முடி நன்றாக வளரும். முன்னந்தலையில் வழுக்கை விழாது. எப்போதும் ஒருவிதப் புத்துணர்ச்சி கிடைக்கும். சரும வறட்சி நீங்கும். உடல் எடையைக் குறைப்பதற்கும் எண்ணெய்க் குளியல் உகந்தது.

வாதம், மூட்டு வலி பிரச்னை இருப்பவர்கள், ஆயில் மசாஜ் செய்து குளிப்பது நல்லது. சைனஸ், சளித் தொல்லை இருப்பவர்கள், கடைகளில் ‘சுக்கு தைலம்’ வாங்கித் தேய்த்துக் குளிக்கலாம். வேர்க்குரு தொல்லைகள் இருப்பவர்கள் ‘அருகம்புல் தைலம்’, ‘வெட்டிவேர் தைலம்’ தடவிக் குளிக்கலாம். குளித்து முடித்து வந்ததும், தலையை நன்றாக ஈரம் போகத் துடைக்கவேண்டும்

Trending News

Latest News

You May Like