1. Home
  2. ஆரோக்கியம்

ஏன் நாம் தினமும் குளிக்கிறோம் ?!

ஏன் நாம் தினமும் குளிக்கிறோம் ?!

நாம் தினமும் காலையில் குளிக்கின்றோம், ஆனால் எதற்கு என்று தெரியுமா? "இதுகூடவா தெரியாது, அழுக்கு போகத்தான்" என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. உண்மையில் அதற்கான விடை அந்த வார்த்தையிலேயே உள்ளது.

குளியல் = குளிர்வித்தல். அதாவது, உடலைக் குளிர்விக்க என்று பொருள். குளிர்வித்தல் என்பது மருவி குளியல் ஆனது. நமது மரபு மருத்துவப்படி, மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்குக் காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்தான். இரவு முழுவதும் தூங்கி எழும்போது நமது உடலில் அதிகப்படியான வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும். எனவேதான் காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம். குளிக்க மிகச் சரியான நேரம் சூரிய உதயத்திற்கு முன்பு ஆகும்.

newstm.in

Trending News

Latest News

You May Like