1. Home
  2. ஆரோக்கியம்

நீண்ட நேரம் கணனி முன் வேலை பார்ப்பவர்கள் நீல நிறங்களை பார்க்க சொல்வது ஏன் ?

1

கண்களின் அழகை பராமரிக்க தினமும் எட்டு மணிநேரம் தூக்கம் மட்டுமல்லாமல் கால்சியம், விட்டமின்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.

அதாவது பால், பால் உணவுகள், கீரை வகைகள், முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப்பழங்கள் பச்சை காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடிகாரம் சுற்றும் முறையிலும், எதிர்முறையிலும் மூன்று முறை சுற்ற வேண்டும். மேலும் அருகில் உள்ள பொருட்களை பார்த்துவிட்டு தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும்.

கட்டைவிரலை நடுவில் வைத்துக்கொண்டு அதனை இடமாகவும் வலமாகவும் விரலை மட்டும் நகர்த்தி தலையை திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பி பார்க்க வேண்டும். தினமும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தால் கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

நீண்ட நேரம் கணனி அல்லது தொலைக்காட்சி முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம் அல்லது கண்களுக்கு குளிர்ச்சி தரும் நீல நிறங்களை பார்க்கலாம்.

ஆரஞ்சு பழத்தை சாறாக பிழிந்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து கட்டியான பின்னர் ஒரு துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஓத்தி எடுத்தால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும். 

மானிட்டரின் வெண் திரையில் கருப்பு நிற எழுத்து, உருவங்கள் கண் பார்வைக்கு நல்லது. சாதாரணமாக உங்களால் பார்க்க முடியும் எழுத்தை விட 3 மடங்கு பெரிய எழுத்தைத்தான் கணினி திரையில் நீங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும்.

கணினித் திரையின் பிரகாசம் கண்களை உறுத்தும் வகையில் இருக்கக்கூடாது.

மானிட்டரில் இருந்து கண்கள் குறைந்தபட்சம் 20 அங்குல தூரம் தாண்டி இருக்க வேண்டும்.

கண் இமைகளை தேவையான அளவுக்கு சிமிட்டாத போது கண்களில் உள்ள தசைகள் இறுக்கம் அடைந்து விடுகின்றன. அதனால் கண்களில் வலி ஏற்பட்டுவிடுகிறது. எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்களுக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக கணினியை விட்டு எழுந்து சிறிதுதூரம் நடந்துவிட்டு வர வேண்டும்.

தலைக்குமேல் இருந்துவரும் ஒளியோ, ஜன்னலில் இருந்துவரும் ஒளியோ உங்கள் கண்களில் நேரடியாகப் படக்கூடாது. அப்படி ஒருவேளை பட்டால் அதை உடனே மறைக்க வேண்டும். உங்களுக்கு தொல்லை ஏற்படுத்தும் மின் விளக்குகளை அணைத்துவிடலாம்.

அவ்வப்போது கணினித் திரையில் இருந்து பார்வையை விலக்கி, சற்றுத் தொலைவில் உள்ள ஒரு பொருளைக் கவனிக்க வேண்டும்.

முடிந்தால், வெள்ளரித் துண்டுகள், குளிர்ந்த தண்ணீரில் நனைத்த துணியால் கண்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம்.

‘சுவர் இருந்தால்தான் சித்திரம்’ என்பதைப் போல, கண் பார்வைத்திறன் நன்றாக இருந்தால்தான் கணினியில் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற முடியும்.கணினியில் பணிபுரியும் அனைவரும் இதை மனதில்கொள்ள வேண்டும்.

Trending News

Latest News

You May Like