கபசுரக்குடிநீர் யாரெல்லாம் குடிக்கலாம்..? யாரெல்லாம் குடிக்க கூடாது..!
கபசுரக்குடிநீர் குடிக்கலாமா? யாருக்கு இது அவசியம் தேவை என்று தெரிந்துகொள்வோம்.
சுக்கு, திப்பிலி, சீந்தில், நீர்முள்ளி வேர், கோஷ்டம், கோரைக்கிழங்கு, இலவங்கம், ஆடாதோடை, வட்டத்திருப்பி வேர், நிலவேம்பு என 15 வகையான மூலிகைகளை கொண்டு தயாரிக்கப் படுகின்றன. காய்ச்சலையும்,சளியையும் தடுத்து நிறுத்தி குணப்படுத்துவதால் இவை கபசுரக்குடிநீர் என்று அழைக்கப்படுகிறது. இயல்பாக இவை உடலில் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் பொருள். ஆனால் எல்லோரும் சாப்பிடலாமா என்பதையும் அறிவது அவசியம்.
உடலில் காய்ச்சல், சளி பிரச்சனை இருக்கும் போது இந்த பொடியை குடிக்கலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் 4 டீஸ்பூன் அளவு பொடி சேர்த்து பாதியாக ஆகும் வரை கொதித்து வைத்து தொடர்ந்து 3 அல்லது 5 நாட்கள் வரை குடிக்கலாம். தினமும் காலை மாலை இரண்டு வேளையும் குடித்துவர வேண்டும்.
பெரியவர்கள் 30 மில்லி அளவிலும் சிறியவர்கள் 15 ம் மில்லி அளவும் குடித்துவரலாம். இவை உடலில் எதிர்ப்புசக்தியை அதிகரித்து சளி, காய்ச்சலுக்கு காரணமான வைரஸ் தொற்றின் வீரியத்தை குறைக்க செய்யும்.
கபசுரக்குடிநீர் அதிக வீரியம் கொண்டிருக்கும் மூலிகைகளை கொண்டவை என்பதால் இதை இளஞ்சூடாக இருக்கும் போதே குடிக்க வேண்டும். அதோடு கஷாயத்தின் வீரியமானது இவை தயாரித்த மூன்று மணி நேரம் மட்டுமே என்பதால் அதற்குள் இதை குடித்துவிட வேண்டும்.
கபசுரகுடிநீரில் இருக்கு மூலிகைகள் தொண்டைக்கும் நுரையீரலுக்கும் மிக நன்மை செய்யகூடிய பொருள். சளியை எளிதாக அகற்றி விடும் போது நுரையீரலில் உள்ள அணுக்களின் அளவை அதிகரித்து சுவாசத்தை எளிதாக்க உதவுகிறது.
நுரையீரலை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது கபசுரக்குடிநீர். மூச்சுக்குழாய், தொண்டை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் இருக்கும் கிருமித்தொற்றுகளை வெளியேற்ற உதவும். உடலில் வெள்ளை அணுக்களின் அளவை அதிகரிக்கும். மாதம் ஒருமுறை கபசுரக்குடிநீர் குடித்துவந்தால் நுரையீரல் எப்போதும் சுத்தமாக வைத்திருக்கலாம். கொடுத்திருக்கும் அளவுக்கு மேல் குடிக்க வேண்டாம்.
கபசுரக்குடிநீர் குடிக்கும் போது உணவுக்கு பிறகு குடிக்க கூடாது. வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் இருக்கும் சளி குறையத்தொடங்கும். காய்ச்சல் நேரத்தில் காலை மாலை என இரண்டு வேளையும் எடுத்துகொள்ளலாம்.
வளரும் சிறுவர்களுக்கு வயதுக்கேற்ப 15 முதல் 20 மில்லி வரையும், பெரியவர்களுக்கு 40 முதல் 50 மில்லி வரையும் எடுத்துகொள்ளலாம். காய்ச்சலின் போது தொடர்ந்து 5 முதல் 7 நாட்கள் வரை எடுத்துகொள்ளலாம். காய்ச்சல் இல்லாதவர்கள் மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே மருத்துவரின் அறிவுரையோடு எடுத்துகொள்ளலாம்.