1. Home
  2. ஆரோக்கியம்

 உலகின் மிக விலையுயர்ந்த நறுமணப் பொருள் எது!

 உலகின் மிக விலையுயர்ந்த நறுமணப் பொருள் எது!

குங்குமப்பூ ஒரு விலையுயர்ந்த மசாலா என்று அனைவரும் அறிவோம், ஆனால் இது உலகின் மிக விலையுயர்ந்த மசாலா என்று நமக்கு தெரியுமா?. குங்குமப்பூ என்பது சாஃப்ரன் பூக்களின் சூலகமுடிகளாகும் . இவை கடந்த 3000 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. இது முதல் முதலில் ஈரானில் பயிரப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், நம் நாட்டின் காஷ்மீருக்கும் இந்த மலர் உரித்ததாகும். ஆண்டு ஒன்றுக்கு ஒரு வார காலம் மட்டுமே இந்த பூக்கள் பூத்து வருகின்றன. தற்பொழுது, குங்குமப்பூவின் பெரும்பகுதி ஈரானிலும் , பத்து சதவிகிதம் காஷ்மீரில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.


உலகின் மிக விலையுயர்ந்த நறுமணப் பொருள்;

454 கிராம் உலர்ந்த குங்குமப்பூ தயாரிக்க , 75000 சாஃப்ரன் மலர்கள் தேவைப்படும், சாஃப்ரன் பூக்கள் தரையில் இருந்து ஆறு அங்குலங்கள் மட்டுமே வளர்வதால், இவ்வகை பூக்களை பராமரித்து வளர்ப்பது மிகவும் கடினமான செயலாக இருந்து வருகிறது.

அதுமட்டுமின்றி இதை வளர்த்து, பராமரித்து, அறுவடை செய்வதற்கு அதிக அளவிலான செலவினங்கள் ஏற்பட்டு வருகின்றன. வருடத்தில் ஓரு வாரம் மட்டும் இந்த பூ பூத்து வருகிறது. அதுமட்டுமின்றி ஓர் பூவில் இரண்டு சூல் மட்டுமே நமக்கு கிடைக்கிறது. இதுபோன்ற பல்வேறு காரணிகள் இதன் விலை உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது

எது ஒரிஜிணல்:

நிபுணர்களின் கூற்றுப்படி, குங்குமப்பூ உண்மையா, போலியா? என்பதை சரிபார்க்க சிறந்த வழி அதன் வாசனை மட்டுமேயாகும். இனிப்பு மற்றும் கசப்பு சுவையுடன் இருந்தால் தான், அது உண்மையான குங்குமப்பூ ஆகும். மேலும் சரிபார்க்க மற்றொரு வழி தண்ணீரில் குங்குமப்பூவை ஊறவைக்க வேண்டும், உண்மையான ஒன்று அதன் நிறத்தை வெளிவிட்டாலும், தனது நிறத்திலிருந்து மாறுபடாது ஆனால் போலி குங்குமப்பூ ,வெள்ளை நிறமாக மாறும் தன்மையுடையது.

குங்குமப்பூவில் உள்ள நன்மைகள்:

குங்குமப்பூ என்பது ஒரு மசாலா பொருள் , ஆனால் மருந்துவ குணம் நிறைந்துள்ளது என பல்வேறு ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் குங்குமப்பூ பொதுவான மன அழுத்தம் மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களுக்கு முன்பாக ஏற்படும் மன அழுத்தம் , மற்றும் பொதுவான எடை இழப்பு ஆகியவற்றை குணப்படுத்த உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் பேறு கால நாட்களில் குங்குமப்பூவை பாலில் கலந்து சாப்பிட்டால் பிறக்க உள்ள குழந்தை சிவப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையும் நம் நாட்டு மக்களிடையே நிலவி வருகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like