ஃப்ரிட்ஜூக்குள் என்னவெல்லாம் வைக்கலாம்...

இது ஆரோக்ய பாதிப்பை உண்டாக்கும். சிலர் ஃப்ரெட் , கெட்ச்சப், சாஸ், ஊறு காய் போன்ற பொருள்களை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்து வார்கள். ஆனால் இவையெல்லாம் வெளியில் வைத்து பயன்படுத்தலாம்...

ஃப்ரிட்ஜூக்குள் என்னவெல்லாம் வைக்கலாம்...
X

நவீன தயாரிப்புகளையெல்லாம் சமையலறைக்கு கொண்டு வந்துவிட்டோம். எல்லாமே ஆரோக்யம் தரக்கூடியவை என்று நினைத்து உழைப்பை பிடுங்கிய பொருள்களின் உதவியை அன்றாடம் நாடுகிறோம். அன்று ஆடம்பரம் என்று அழைக்கப்பட்ட பொருள்கள் எல்லாமே இன்று அத்தியா வசியமான பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன.அவற்றில் ஒன்று ஃப்ரிட்ஜ்.

மருந்துகள், காய்கறிகள்,பால் போன்ற சமைக்காதஉணவு பொருள்களை நீண்ட நாள்கள் வைத்திருந்து பயன்படுத்துவது தான் ஃப்ரிட்ஜ் கண்டு பிடித்த தன் நோக்கமே. குறிப்பிட்ட மருந்து பொருளோ குறிப்பிட்ட உணவு பொருள்களோ தட்டுப்பாடு வரும்போது பயன்படுத்தி கொள்வதற்காக த்தான் ஃப்ரிட்ஜ்.

இப்போதெல்லாம் கடந்த மாதம் வைத்த காரக்குழம்பு முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாங்கிய இறைச்சி வரை ஃப்ரிட்ஜூக்குள் அடைபட்டு கிடைக்கிறது. வாங்கிய எல்லா பொருள்களையுமே ஃப்ரிட்ஜில் வைக்ககூடாது. எஞ்சிய உணவு பொருள்கள் முதல் தேவையே இல்லாத பொருள் களை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தவே கூடாது. அவை என்னென்ன என்று பார்க்கலாமா?

வைக்க கூடாத பொருள்கள்:

அடைத்து வைக்க வேண்டிய பொருள் அல்ல என்பதால் வெங்காயத்தை நிச்சயம் ஃப்ர்ட்ஜில் வைத்து பயன்படுத்தக்கூடாது. ஆனால் ஸ்ப்ரிங் ஆனியன் எனப்படும் வெங்கயாத்தாளை ஃப்ரிட் ஜில் வைக்கலாம்.அதே போன்று பூண்டையும் வைக்க கூடாது. அப்படி வைத்தால் நாளடைவில் அது பூஞ்சை பிடிக்க ஆரம்பித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று உருளைக் கிழங்கு, தேங்காய், வாழைப்பழம், பூசணிக்காயையும் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தக்கூடாது.

மூன்று நாட்களுக்கு மேல் இறைச்சியை ஃப்ரிட்ஜூக்குள் வைக்கக் கூடாது. ஏனெனில் இறைச்சியில் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாக இருக்கும். அது அருகில் உள்ள உணவு பொருள்களில் பரவக்கூடும் என்பதால் இறைச்சிகள் வைப்பதற்கென்று தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டிருக்கும். அவற்றில் மட்டும் இறைச்சியை வைத்து பயன்படுத்தலாம்.

பழங்களை ஃப்ரிட்ஜூக்குள் வைத்து பயன்படுத்தலாம். ஆனால் பழங்களை நறுக்கிய பிறகு ஃப்ரிட்ஜுக்குள் வைக்க கூடாது. சிலர் தர்பூசணி பழங் களைப் பாதியாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவார்கள். இது ஆரோக்ய பாதிப்பை உண்டாக்கும். சிலர் ஃப்ரெட் , கெட்ச்சப், சாஸ், ஊறு காய் போன்ற பொருள்களை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவார்கள். ஆனால் இவையெல்லாம் வெளியில் வைத்து பயன்படுத்தலாம். ப்ரெட் வறண்டு விடும். மற்ற பொருள்கள் விரைவில் கெடாமல் இருக்கும் தன்மை கொண்டதால் அவற்றை வெளியில் வைத்தே பயன்படுத்தலாம்.

தேன் என்பது வருடக்கணக்கில் நன்றாக இருக்கக் கூடிய பொருள். அதை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் குறைந்த வெப்பநிலையில் இது படிகமாக துவங்கிவிடும். சமைத்த உணவு பொருளை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவோம்.மின்சாரம் இல்லாத போது இரண்டு மணி நேரங்க ளுக்கு மேல் அதில் வைக்கப்படும் உணவு பொருள்கள் கெட்டுவிட வாய்ப்புண்டு என்பதால் அதிக நேரம் வைத்து பயன்படுத்தக்கூடாது.

சூடான உணவு பொருள்களை ஒரு போதும் ஃப்ரிட்ஜூக்குள் வைக்க கூடாது. பொதுவாகவே உணவு பொருள்களை ஃப்ரிட்ஜூக்குள் வைத்து பயன் படுத்துவது ஆரோக்ய குறைபாட்டையே உண்டாக்கும் என்றாலும் பதமாக பொருள்களைத் திணிக்காமல் தேவைக்கு பயன்படுத்துவதே ஆரோக்ய த்துக்கு நல்லது.

newstm.in

newstm.in

Next Story
Share it