1. Home
  2. ஆரோக்கியம்

சக்கரை நோயாளிகள் எந்த ஜூஸ் குடிக்கலாம்..! மாதுளை ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாமா ?

1

சர்க்கரை நோய் என்பது இன்றைய தினங்களில் மிகவும் சாதாரணமான ஒன்றாக ஆகிவிட்டது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த சில ஜூஸ்களை பற்றிய பரிந்துரைகளை இங்கே பார்க்கலாம்.

நீங்கள் சில பழங்களை தவிர்த்து விட்டு ஜூஸ்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பழங்களில் உள்ள இயற்கையான சர்க்கரை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்தும். இருப்பினும் கீழே பட்டியலிடப்பட்டுள்ள சில ஜூஸ்கள் பாதுகாப்பானவை மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் ஜூஸ் ஒரு அற்புதமான பானமாகும். பாகற்காய் உங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த உதவுகிறது. ஆய்வுகளின்படி பாகற்காயில் சர்க்கரை நோய்க்கு எதிரான சில துடிப்பான மூலக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கிறது. அவற்றில் ஒன்று ”சேரண்டின்”. ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைக்கும் இதன் திறனுக்காக புகழ்பெற்று அறியப்படுகிறது. பாகற்காயில் பாலி பெப்டைட் -பி, அல்லது பி - இன்சுலின் எனப்படும் இன்சுலினை போன்ற ஒரு மூலக்கூறு அடங்கியுள்ளது. இது இயற்கையாக நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதாக தெரிகிறது. இந்த மூலக்கூறுகள் தனித்தோ அல்லது ஒருங்கிணைந்தோ ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.

பசலைக்கீரையானது போலேட், உணவு சார்ந்த நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கே ஆகிய சத்துக்களின் சிறந்த ஆதாரமாகும். பசலைக்கீரையில் அடங்கியிருக்கும் நார்ச்சத்து செரிமானத்தைத் தாமதப்படுத்தி நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கும் சர்க்கரை விரைவில் வளர்ச்சிதை மாற்றம் அடையாமல் இருப்பதையும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்காமல் இருப்பதையும் உறுதி செய்கிறது.

அதோடு பசலைக் கீரை ஜூஸ் உங்களுடைய பசியைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். நீண்ட நேரம் பசி தாங்கிக் கொள்ள முடியும். ஏற்கனவே சாப்பிட்ட உணவின் செரிமானத்தை சீராக்கவும் இநத பசலைக்கீரை சாறு உதவுகிறது.

இந்த அற்புதமான மருத்துவக் குணங்களைக் கொண்ட ஆயுர்வேத பானம் உங்கள் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பதில் பெரிய அற்புதங்களை நிகழ்த்துகிறது. அதிகாலையில் 2 ஸ்பூன் நெல்லிக்காய் ஜூஸுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்த்து குடியுங்கள். நெல்லிக்காய் என்பது இந்திய நெல்லி மரத்தில் விளையும் ஒருவகை பழமாகும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பாரம்பரிய சிகிச்சை முறையாக பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கார்போஹைட்ரேட் வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்குப்படுத்தவும் மேலும் உங்கள் உடலை இன்சுலினுக்கு இணங்க செய்யவும் உதவக்கூடிய குரோமியம் என்கிற மினரல் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.

மாதுளம்பழம் மிகுந்த இனிப்புச் சுவையுடையதாக இருந்தாலும் மாதுளம் பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதில்லை என்பது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். மேலும் மாதுளம்பழ ஜூஸில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்திருக்கிறது. மேலும் ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தண்ணீர் எப்பொழுதும் அருந்துவதற்கு சிறந்த முதன்மையானதொரு பானமாகும். வெறும் தண்ணீருடன் சிறிது சுவையை சேர்ப்பதற்காக சில எலுமிச்சை துண்டுகள், சில வெள்ளரிக்காய் துண்டுகள், புதினா அல்லது துளசி போன்ற சில பிரஷ்ஷான மூலிகைகள், அல்லது இரண்டு நசுக்கிய ராஸ்பெர்ரி பழங்களை நீருடன் சேர்த்துப் பருகலாம்.சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுவதால், அவர்கள் நிறைய தண்ணீர் குடி்பபதைத் தவிர்ப்பார்கள். அது முற்றிலும் தவறு. உடலுக்குப் போதிய நீர்ச்சத்தை எப்போதும் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

கூடுதல் சர்க்கரை அல்லது இதர ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால் கடைகளில் விற்கும் ஆரஞ்சு ஜூஸ்களை வாங்குவதை தவிர்க்கவும். சர்க்கரை நோயாளிகள் சிறிய கிளாஸ் அளவு புதிதாக பிழியப்பட்ட பிரஷ்ஷான ஆரஞ்சு ஜூஸை பருகலாம். பொதுவாக உணவுடன் இந்த ஜூஸை எடுத்துக்கொள்வது உகந்தது. அல்லது முழுமையாக நார்ச்சத்துக்களையும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நன்மைகளையும் பெறுவதற்கு ஆரஞ்சு பழத்தை அப்படியே சாப்பிடுவது இன்னும் சிறந்தது. ஆரஞ்சு பழத்தில் குறைந்த அளவு சர்க்கரை இருக்கிறது.

இதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக் கூடிய ரத்தம் உறையும் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு தக்காளி ஜூஸ் மிகச்சிறந்த பானங்களில் ஒன்றாகும்.தினமும் ஒரு சிறிய கிளாஸ் தக்காளி ஜூஸ் குடிப்பது இந்த அபாயத்தை குறைக்க உதவுகிறது. ஆனால் அது சர்க்கரை சேர்க்காத தக்காளி ஜூஸாக இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.

Trending News

Latest News

You May Like