ஜலதோஷமும் மூக்கடைப்பும் சரி செய்ய மாத்திரை எதுக்கு?

ஜலதோஷமும் மூக்கடைப்பும் சரி செய்ய மாத்திரை எதுக்கு?

ஜலதோஷமும் மூக்கடைப்பும் சரி செய்ய மாத்திரை எதுக்கு?
X

ஜலதோஷமா, மூக்கடைப்பா? மாத்திரை சாப்பிட்டால் ஏழு நாளில் குறைந்து விடும். மாத்திரை சாப்பிடாவிடால் ஒரு வாரத்தில் குறைந்துவிடும் என்று விளையாட்டாக சொல்வதுண்டு. ஆனால் வந்தாதான் தெரியும் வலியும், அவஸ்தையும் என்று மூக்கடைப்புக்கு சொல்வது கனப்பொருத்தமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதற்கு விதி விலக்கல்ல.

பொதுவாக ஜலதோஷம் வந்தவர்கள் உடல்நிலைசரியில்லாமலோ, தொடர்ந்து மூக்கில் நீர்வடிதலோ, மூக்கடைப்பு, தும்மல், இருமல் போன்றவற்றால் பாதிக் கப்பட்டு உடலின் வெப்பநிலையையும் சற்று அதிகமாக உணருவார்கள். சுவாசக்குழாயியின் மேல்புறம் வைரஸ் தொற்றால் ஜலதோஷம் உண்டாகி றது. இந்த வைரஸ் வீரியம் குறைந்தவுடன் அல்லது இறந்தவுடன் சகஜ மான நிலைக்கு வந்தடைகிறார்கள்.

காய்ச்சல் என்று வருவதற்கு முன்பே அழையா விருந்தாளியாக நம்மோடு ஒட்டிக்கொள்ளும் ஜலதோஷமும், மூக்கடைப்பும் மருத்துவர்களிடம் சென் றால் தான் குணமாகும் என்றில்லை. பாட்டிக்கால கை வைத்திய முறைகளி லேயே சரிசெய்யகூடிய ஒன்றுதான். அதனால் தடுக்கி விழுந்ததெற்கல்லாம் மருத்துவர்கள் என்று ஓடவேண்டியதில்லை. அதிலும் தற்போது மழை எட்டி பார்க்க தொடங்கியதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் இயல்பாகவே ஜலதோஷம், மூக்கடைப்பு பிரச்னைக்கு ஆளாக நேரிடலாம். குறிப்பாக சைனஸ், அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு மழைக்காலத்தில் மூச்சு விடுத லில் சிரமமாகவே இருக்கும்.

ஜலதோஷம் இருக்கட்டும் மூக்கடைப்பு பிரச்னை சரியானா போதும் மூச்சு கூட விட முடியல என்று சொல்பவர்களுக்கு பாட்டி கால வைத்தியம் அரு மையான பலனைக் கொடுக்கும்.மூக்கடைப்பு இருப்பவர்கள் நொச்சி இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்து அதில் வரும் புகையை இயன்ற அளவு மூக்கை இழுத்து சுவாசிக்கலாம். மூக்கடைப்பு தற்காலிகமாக விடுபடும். மூச்சு விடுவதில் சிரமம் இருக்காது.

அதே போன்று குளிக்கும் போது யூகலிப்டஸ் இலை அல்லது நீலகிரி தைலம் இரண்டு சொட்டு சேர்த்து குளித்தால் உடலில் சற்று பலம் தெரியும். காலை யில் வெறும் வயிற்றில் வெந்நீரில் துளசி இலை/ தூதுவளை / ஆடாதொடை என ஏதேனும் ஒரு மூலிகையை சேர்த்து தேநீராக்கி குடிக்கலாம். தேவை யெனில் இனிப்புக்கு சுத்தமான தேன்சேர்ப்பது நல்லது.

இயன்றவரை அவ்வப்போது மணத்தக்காளி, தூதுவளை, வல்லாரை போன்றவற்றை சூப்- ஆக தயா ரித்து மிளகு சேர்த்து குடிக்கலாம்.
முன்னோர்கள் மிளகை நெருப்பில் சுட்டு அந்த புகையை மூக்கால் நன்கு முகர்வார்கள். மிளகின் நெடியைவிட இதை சுடும் போது நெடி இன்னும் அதிக மாக இருக்கும். ஆனால் நல்ல பலன் கிடைக்கும். இதேபோன்று விரலி மஞ் சளை விளக்கெண்ணெய் தடவி நெருப்பில் சுட்டு அந்த புகையையும் சுவாசிப் பார்கள்.

உணவில் பூண்டு, இஞ்சி, மிளகு, தூதுவளைக்கீரை, மணத்தக்காளி கீரை, மஞ்சள் தூள் இவற்றை அதிகம் சேர்ப்பார்கள்.
ஜலதோஷம் மூக்கடைப்பின் போது சிலருக்கு தலைவலியும் சேர்த்து உண்டாகும். அப்போது சுக்கை இழைத்து நெற்றியில் பற்று போட்டால் தலை வலி பட்டென்று பறந்துபோகும். மாதம் ஒரு முறை ஜலதோஷம் வராமல் தடுத்திட முன்னெச்சரிக்கையாக கஷாயம் காய்ச்சுவார்கள்.

10 உலர்திராட்சை, 3 ஏலக்காய், 5 மிளகு, தேன், உள்ளங்கை அளவு இஞ்சியை தோல்சீவி சிறுதுண்டுகளாக நறுக்கி மிளகு, ஏலக்காய் சேர்த்டு மிக்ஸீயில் மைய அரைத்து வைக்கவும். நான்கு தம்ளர் நீர்விட்டு அரைத்த இஞ்சி விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இரண்டு தம்ளர் பதத்துக்கு வந்ததும் வடிகட்டி உலர்திராட்சையை அரைத்து சேர்த்து இனிப்பு தேவையான அளவு தேன் சேர்த்து குடிப்பார்கள்.

இதை மழைக்காலங்கள் வருவதற்கு முன்பு சாப்பிட்டு விட்டால் ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமல், காய்ச்சல், தலைவலி என்று எதுவும் வராது. கஷாயமா என்று முகம் சுளிப்பவர்கள் கூட இதை ஒரு முறை அருந்திவிட்டால் மீண்டும் விரும்பி குடிப்பார்கள். தொண்டைக்கு இதமான கஷாயத்தை குடித்தால் மாத்திரைகளின் பக்கம் போகவேண்டாம்…

newstm.in

newstm.in

Next Story
Share it