1. Home
  2. ஆரோக்கியம்

ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...

ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு என்ன தான் காரணம்...

இன்று பெண்களைப் பாடாய்ப்படுத்திக்கொண்டிருக்கும் ஒழுங்கற்ற மாதவிலக்கு குறித்தும் அதனால் பிற்காலத்தில் கருத்தரித்தலில் பிரச்னை யை உண்டு பண்ணும் என்பதையும் ஆரோக்ய கட்டுரையில் பார்த்தோம். ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு காரணம் என்ன என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு நவீன வாழ்க்கை முறையும், மாறிவரும் உணவுப் பழக்கமும் ஓய்வில்லாமல் இயங்குவதும் பிரதான காரணங்களாக இருக்கிறது.சிலவற்றைத் தவிர்க்க முடியாது எனினும் சற்றே எச்சரிக்கையுடன் அதைக் கையாண்டால் தாய்மை அடைவதில் பிரச்னை இருக் காது.

குறைந்த எடை -அதிக எடை :
உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தீவிர உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கும் போது உடலுக்கு தேவையான கலோ ரிகள் போதுமான அளவு கிடைப்பதில்லை. அதனால் உடலில் சத்துக்கள் குறைகிறது. உணவுக்கட்டுப்பாட்டோடு கடுமையான உடற்பயிற்சியை யும் மேற்கொள்ளும் போது சிலருக்கு இப்பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. உடலில் நல்ல கொழுப்புகள் குறைந்து உடல் மெலிந்து காணப்படும் போது குழந்தையைத் தாங்கும் அளவுக்கு போதுமான சக்தி கருப்பை இல்லாமல் போவதும் உண்டு என்பதால் ஒழுங்கற்ற மாதவிடாயை ஆரம்ப காலத்திலேயே கவனிக்க வேண்டும்.

உயரத்துக்கும் வயதுக்கும் உரிய எடையை விட அளவுக்கதிகமான எடை இருக்கும் இளம்பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடு உண்டாகும். இது சுழற்சி முறையில் சீராக வரும் மாதவிலக்கை சீரற்று போக செய்யும். இவை தொடரும் பட்சத்தில் உடல் பருமனால் குழந்தைப்பேறிலும் சிக்கலை உருவாக்கும்.


மன அழுத்தம்:
ஓய்வே இல்லாமல் பெண்கள் வீட்டிலும் வெளியிலும் பணியிடங்களிலும் பணி அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள்.மன அழுத்தம் அதிகரிக்கும் போது மாதவிடாய் ஏற்படுத்தும் ஹர்மோன்களிலும் பாதிப்புகளை உண்டாக்குகிறது. இதனால் உரிய நேரத்தில் கருமுட்டை உற்பத்தி பாதிப்பு உண்டாகி ஒழுங்கற்ற மாதவிடாயை உண்டாக்குகிறது. தற்போது பள்ளியில் படிக்கும் பதின்ம வயது பெண்பிள்ளைகளும் கல்வி சுமையால் திணறி மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உணவில் கவனம்:
பெண்கள் பூப்படைந்ததும் கறுப்புஉளுந்தும், நல்லெண்ணெயும் தான் ஒரு மாத காலத்துக்கு முக்கிய உணவாக இருக்கும். இப்போது துரித உணவு களும், பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருக்கும் நொறுக்குத்தீனிகளும் எண்ணெய் பலகாரங்களும் உடலுக்கு கேடுகளையே விளைவிக்கிறது. அவ சர யுகத்துக்கு ஏற்ப உணவுகளில் போதுமான அளவு கவனம் செலுத்துவதில்லை என்பதும் ஒழுங்கற்ற மாதவிலக்கு ஏற்பட ஒருவகையில் கார ணமாகிறது.

ஹீமோகுளோபின் குறைபாடு:
இரும்புச்சத்து குறைபாட்டினால் இரத்தத்தில்உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. மாதவிலக்கின் போது உண்டாகும் இரத்தப்போக்கு உடலில் பல வீனங்களை உண்டாக்குவதோடு எலும்புகளிலும் வலுவை இழக்க செய்கிறது. இதனாலும் மாதவிடாய் பிரச்னைகள் உண்டாகிறது.

பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்:
ஹார்மோன் சுழற்சி சமநிலையில் இல்லாத போது ஏற்படும் பிரச்னை பி.சி.ஓ.எஸ். என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பிரச்னை இருக்கும் பெண் கள் உரிய சிகிச்சை எடுக்க தவறினால் கருமுட்டையில் பாதிப்பை உண்டாக்கி கருத்தரித்தலில் சிக்கலை உண்டாக்கிவிடும். ஒழுங்கற்ற மாத விடாய் பிரச்னை உள்ள பெண்கள் நிச்சயம் மருத்துவரை அணுகி இந்தப்பிரச்னை இருக்கிறதா என்பதை பரிசோதித்துக்கொள்வது அவசியம்.

தைராய்டும் ஒருவகை காரணமே:
தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னையை சந்திப்பார்கள். உடல் எடைகூடுவது, உடல் எடை குறைவது போன்று இந்த பிரச்னையும் இயல்பாக நடைபெறும். அதிலும் ஹைப்போதைராய்டிஸம் முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுகி றது. வளர்சிதை மாற்றத்தில் மட்டுமல்ல உடல் சோர்வு, அதிகப்படியான பருமன், கருத்தரித்தலில் சிக்கல் என அனைத்து பிரச்னைகளுக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது.

குழந்தைப்பேறுக்கு பிறகான ஒழுங்கற்ற மாதவிடாயைக் காட்டிலும் பருவமடைந்த பெண்கள் இந்தப் பிரச்னையைக் கொண்டிருந்தால் நிச்சயம் அனுபவமிக்க மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை பெற வேண்டும். ஒழுங்கற்ற மாதவிடாய் மூலம் கருத்தரித்தலில் பிரச்னையின்றி காத்துக் கொள்ள ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை மேற்கொள்வது அவசியமும் கூட. ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னையை சந்திக்காமல் இருக்க என்ன செய்யலாம். தொடர்ந்து பார்க்கலாம்.


newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like