1. Home
  2. ஆரோக்கியம்

பாதங்களில் வீக்கமா என்ன செய்யலாம்...

பாதங்களில் வீக்கமா என்ன செய்யலாம்...

கடுமையான வேலைகளை செய்த முன்னோர்கள் யாத்திரைகளுக்கு நடந்து தான் சென்றார்கள். உடலை வருத்திக்கொள் ளாமல் அவர்கள் எந்த வேலையையும் செய்ததில்லை. அப்படி செய்யும் வேலைகளை வேலையாக பார்த்ததில்லை. காலம் மாறிவிட்டது. நாம் நவீன யுகத்தில் இருக்கிறோம்.

எல்லாமே நவீனம் தான். உணவு முறையிலும் நவீனம், வாழ்க்கை வாழ்வதிலும் நவீனம் பணியிலும் நவீனம் என்று எல் லாமே நவீனம்தான். உலகமே கணினி மயம்தான். ஆனால் என்ன பயன் பெருகிவரும் நோயும், நிம்மதியற்ற வாழ்க்கைச் சூழலும் தவிர.

உடல் உழைப்பையும் சுகமாகவே செய்கிறோம். கடுமையான உடல் உழைப்பி வராத வலி சுகமாய் மன அழுத்தத்தோடு செய்யும் போது எட்டிப்பார்த்து விடுகிறது. இதில் காரண காரியங்களற்று இதற்குத்தான் இந்த அறிகுறி என்று சொல்ல முடி யாத அளவுக்கு பல நோய்கள் புற்றீசல் போல் உடலில் ஆங்காங்கே முளைத்து வருகிறது.

ஆரோக்யமான உடலை கொண்டிருப்பவர்கள் கூட பயணங்களின் போது படும் அவஸ்தைகளில் ஒன்று பாதத்தில் உண்டா கும் வீக்கம். பொதுவாக நீண்ட நேரம் உட்காருவதால் இது அடிக்கடி வருகிறது என்று அலட்சியப்படுத்தாமல் இத்தகைய பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரை அணுகுவதே நல்லது.

பாதத்தில் வீக்கம் ஏன்:

ஆண்களை விட பெண்களே பெரும்பாலும் இந்தப் பாதப்பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். இயல்பாகவே நீண்ட நேரம் கால்களை அசைக்காமல் (நின்று/உட்கார்ந்து/ பயணத்தில்) இருக்கும்போது வீக்கம் உண்டாவது சாதாரணமானது. இந்த வீக்கம் அடுத்த நாள் சரியாகிவிடும். அதனால் இவர்கள் பயப்படத்தேவையில்லை.

ஏனெனில் கால்களில் அதிக நீர்த்தேக்கம் ஏற்படும் போது வீக்கம் வரும். நீண்ட நேரம் நின்றிருந்தாலோ அல்லது ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்திருந்தாலோ இந்த வீக்கம் உண்டாக வாய்ப்புண்டு. காரணம் இவர்கள் கால்களை அசைக் காமல் ஒரே இடத்தில் வைக்கும் போது இரத்த ஓட்டத்தின் வேகம் குறைகிறது.

கால்களைத் தொங்கவிட்டு அமருபவர்களுக்கு உட்கார்ந்த சில மணித்துளிகளில் வீக்கம் உண்டாவதும் தொடர்ந்து இத்தகைய பிரச்னைகள் இருப்பதும் அவரது உடலில் ஏதோ ஒரு குறைபாட்டின் தொடக்கம் என்று சொல்லலாம். எப்போ தாவது என்றால் பரவாயில்லை. ஆனால் அவ்வப்போது இப்படியான வீக்கத்தைச் சந்தித்தால் நிச்சயம் ஒரு பரிசோதனை அவசியம்.

நீரிழிவு அதிகமிருப்பவர்கள், இதய நோய்,வலுவிழந்த இதயம், சோர்வு அடிக் கடி சிறுநீர் கழித்தல், உடல் பருமன் பிரச்னை போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை உண்டாகும்.சிலருக்கு கால்களில் நரம்புகள் சுருட்டியிரு க்கும். அதனாலும் வீக்கம் ஏற்படுகிறது. இன்னும் சிலருக்கு மரபு ரீதியாகவும் வருவதற்கு வாய்ப்புண்டு.

பாதவீக்கத்தைக் குறைக்க என்ன செய்யலாம்:

ஒரே இடத்தின் நின்று அல்லது உட்கார்ந்து பணி செய்பவர்கள் பலமணிநேரம் ஒரே மாதிரி இல்லாமல் அரைமணி நேரத் துக்கு ஒரு முறை எழுந்து, நடந்து சென்று வரவேண்டும். இதனால் கால்களில் இரத்த ஓட்டம் சீராகி வீக்கம் உண்டாகா மல் காக்கும்.

உட்கார்ந்து பணி செய்பவர்கள் கால்களை தரையில் ஊன்றி வைப்பார்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சப்பண மிட்டு அமரலாம். கால்களை சிறிய ஸ்டூல் கொண்டு அதன் மீது வைக்கலாம். இப்படி மாறி மாறி வைக்கும் போது பாதங் களில் வீக்கம் எளிதில் வராது.

நீர் கோர்வையும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் என்பதால் அதிகளவு நீரை குடிப்பது நல்லது. பார்லி தண்ணீரைக் குடித்தால் வீக்கம் கட்டுப்படும். அளவுக்கதிகமான வீக்கம் இருந்தால் மருத்துவ சிகிச்சை தவிர வேறு எதற்கும் வீக்கம் கட்டுப்படாது.

இரவு நேரங்களில் தூங்கும் போது கால்களுக்கு உயரமான தலையணைகளை அடியில் வைத்தால் மறுநாள் பாதத்தில் வீக் கம் மட்டுப்படும்.

பயணங்களின் போதும் கால்களை நீண்ட நேரம் தொங்கவிடாமல் சற்று உயரத்தூக்கி வைத்துக்கொள்ளலாம்.

இப்படி என்ன செய்தாலும் பாதங்களில் வீக்கம் ஏற்படுவது மட்டும் குறையவில்லையா. அப்படியெனில் நிச்சயம் நீங்கள் மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

Newtm.in

newstm.in

Trending News

Latest News

You May Like