1. Home
  2. ஆரோக்கியம்

என்னங்க சொல்றீங்க... கொரோனா தொற்றால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா..?

என்னங்க சொல்றீங்க... கொரோனா தொற்றால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா..?


கொரோனா தொற்று மனிதனின் சுவாசப் பாதையை பாதிக்கும் நோயாக மட்டுமே ஆரம்பத்தில் அறியப்பட்ட நிலையில், இந்த வைரஸ் உடலின் பல பாகங்களை சேதப்படுத்துவது அடுத்தடுத்த ஆய்வுகள் மூலம் நிரூபணமாகி வருகிறது. அந்த வகையில், கொரோனா ஆண்மை குறைப்பாட்டை ஏற்படுத்தும் என கடந்த ஓராண்டாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ‘தற்போது நடக்கும் ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கையில், கொரோனா ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை,’ என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

கொரோனா குறுகிய காலத்திற்கு மட்டுமே விந்தணுக்களின் தரத்தை பாதிக்கும். விந்தணுக்களின் எண்ணிக்கை, அளவு மற்றும் இயக்கம் ஆகியவற்றில் 50 சதவீதம் பாதிப்புகள் இருப்பதாக ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.

கொரோனாவில் இருந்து குணமடைந்த ஆண்களில் 10 முதல் 20 சதவீதம் பேர் டெஸ்டிகுலர் வலியை அனுபவித்து இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், பெரும்பாலானோருக்கு விந்துகளில் வெள்ளை ரத்த அணுக்கள் அதிகமாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. விதைப்பையில் வலி, வீக்கம், கட்டிகள் போன்ற நோய்களையும் கொரோனா ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது,

கொரோனா ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக் கூடும். ஆனால், நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை. கொரோனாவில், இருந்து மீண்டவர்கள் விரைவில் தங்கள் விந்தணுக்கள் எண்ணிக்கை குறித்து உடனடியாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கொரோனா ஆண்களின் விந்தணுக்களின் செயல்பாட்டை சேதப்படுத்தும். விந்தணுக்களின் உற்பத்தி அல்லது பாலியல் ஹார்மோன்களின் உருவாக்கத்தை பாதிக்கும். இதற்கு கொரோனா மட்டுமே காரணம் என கூறிவிட முடியாது.

கொரோனா பாதிப்பால் ஏற்படும் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தங்கள் ஆகியவையும் காரணங்களாகும்.

இந்த பாதிப்பு பாதிக்கப்படும் நபரின் நோய் எதிர்ப்பு சக்தி, எடை பிரச்சினைகள், உணவு, அடிப்படை சுகாதார நிலைகள் போன்ற பல்வேறு காரணிகளைச் சார்ந்தது. விந்தணுக்களின் தாக்கமும் நோய்த்தொற்றின் தீவிரத்தை பொறுத்தது. நபரின் தொற்று அதிகமாகவோ அல்லது மிதமாகவோ இருந்தால் அது தற்காலிக ஆண்மைக் குறைவுக்கு வழிவகுக்கும். இருப்பினும், நிரந்தர சேதம் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வில் நிபுணர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

பொதுவாக, வைரஸ் காய்ச்சல்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம், ஆனால் பாதித்தவர் மீண்டும் ஆரோக்கியமாகி விட்டால், சில வாரங்களில் விந்தணுக்களின் எண்ணிக்கை பெருகும். ஆனால், கொரோனாவால் இழந்த ஆண்மையை மீட்க எவ்வளவு காலமாகும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Trending News

Latest News

You May Like