1. Home
  2. ஆரோக்கியம்

வறண்ட கூந்தலை மீட்டெடுக்க என்ன செய்யலாம்?

வறண்ட கூந்தலை மீட்டெடுக்க என்ன செய்யலாம்?

என்னவெல்லாம் செய்யலாம் என்று கேட்பதோடு நிறுத்தி கொள்ளாமல் கடும் சிரத்தையோடு இதையெல்லாம் செய்தும் பார்க்கவேண்டும் என்று பெண்கள் நினைப்பது ஒரே ஒரு விஷயத்துக்குத்தான். அதுதான் கூந்தல் வளர்ச்சி. அழகை அதிகமாக்கி காட்டும் திறமை கூந்தலுக்கு உண்டு. கூந்தல் நீண்டு இருப்பதையே பெண்கள் விரும்பினாலும் எல்லோருக்கும் அது அமைவதில்லை. ஆனால் பெண்களுக்கு அமைந்த சிறிய கூந்தலும் வறண்டு, அடர்த்தியின்றி பொலிவின்றி, கூந்தல் உதிர்வு என்று ஒன்றையாவது சந்திக்காமல் இருப்பதுமில்லை.

கூந்தல் பராமரிப்பு என்பது பெரிய கலையல்ல. சீரான சத்துமிக்க உணவும், முறையான பராமரிப்பும் இருந்தால் அழகிய கூந்தல் சாத்தியமே. ஆனால் கூந்தல் வளர்ச்சியில் எந்த முறையைக் கடைப்பிடித்தாலும் பொறுமை மிகவும் அவசியம்… பரபரப்பான வேலைகளுக்கிடையே கூந்தலையும் பராமரிக்க முடியாது. குறைந்தது நாள் ஒன்றுக்கு ஐந்துநிமிடங்களாவது ஒதுக்குவது நல்லது.

கூந்தல் வளரவேண்டும். இருக்கும் கூந்தல் உதிராமல் இருக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாமா?

வறண்ட கூந்தலுக்கு முக்கிய காரணம் தண்ணீரில் இருக்கும் குளோரின் தான். இதில் கூந்தலை அலசும் போது நிச்சயம் கூந்தல் வறண்டு விட அதிகம் வாய்ப்புண்டு. அதிக வெயில் அல்லது அதிக குளிரினாலும் கூந்தல் பாதிக்கக்கூடும். உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து இருந்தாலோ, மலேரியா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களின் பாதிப்பினாலோ கூட கூந்தலில் வறட்சி உண்டாகலாம். இவை எதுவுமே இல்லையென்றாலும் போதிய இரும்பு, புரதம், ஊட்டச்சத்து இல்லாமலும் கூட கூந்தலில் வறட்சி உண்டாக லாம் என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள்.

வறண்ட கூந்தலை சரிசெய்தாலே கூந்தல் வளர்ச்சி, கூந்தல் பொலிவு, கூந்தல் ஆரோக்யம் என அனைத்து பிரச்னைகளும் சரியாகும். வாரம் ஒரு முறை தலைக்கு குளிப்பதற்கு முன்பு ஆயில் மசாஜ் செய்வது கூந்தலின் வேர்க்கால் களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தலுக்கு பொலிவைக் கொடுக்கும்.

இதற்கென்று வெளியில் பிரத்யேக ஆயில் வாங்கவேண்டிய அவசியமில்லை. வீட்டிலிருக்கும் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் போன்றவற்றை இலேசாக சூடுபடுத்தி நான்கு விரல்களால் கூந்தலின் வேர்க்கால்களில் படும்படி மசாஜ் செய்ய வேண்டும்.
கூந்தலின் அனைத்து இடங்களிலும் எண்ணெய் படர்ந்து வேர்க்கால்களில் மசாஜ் செய்யப்பட வேண்டும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கூந்தலை அலச வேண்டும். கெமிக்கல் அதிகம் இல்லாத ஷாம்பு அல்லது வெந்தயம், செம்பருத்தி இலைகள் கலந்த சீயக்காயைப் பயன் படுத்துவது நல்லது. ஆனால் எதை பயன்படுத்தினாலும் ஒன்றையே பயன்படுத்த வேண்டும். ஷாம்பு தான் சாய்ஸ் என்பவர்கள் கூடவே கண்டிஷனர் பயன்படுத்துவதும் நல்லது.

உடலில் குளுமை இல்லாதவர்கள் மருதாணி, செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி குளிக்கலாம். அதேபோன்று நெல்லிக்காய் சாறையும் நன்றாக கூந்தலில் படும்படி தடவி ஊறவைத்து குளித்துவரலாம். கற்றாழை, எலுமிச்சைச்சாறு, வெந்தயத்தூள், நெல்லிச்சாறு,தயிர் அனைத்தையும் சேர்த்து தலையில் தடவி (எல்லா பொருள்களுமே குளுமை மிக்கவை) கால் மணிநேரம் கழித்து தலைக்கு குளித்துவந்தால் கூந்தல் பிரச்னை அத்தனையும் அடியோடு நீங்கும்.

எக்காலத்திலும் கூந்தலில் சிக்கு பிடிக்காமல் பார்த்துகொள்வதும், கூந்தலை விரித்துப்போடுவதும் கூட வறண்ட நிலையை உண்டாக்கிவிடும். வறண்ட கூந்தலைச் சரி செய்தால் கூந்தல் வளர்ச்சியை தடுக்கவே முடியாது. எனவே உங்கள் கூந்தல் வறண்டிருக்கிறதா என்பதை முதலில் பரிசோதியுங்கள்..

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like