1. Home
  2. ஆரோக்கியம்

தீபாவளியன்று நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் இத்தனை பலன்களா?

தீபாவளியன்று நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் இத்தனை பலன்களா?


வாரம் இருமுறைகள் எண்ணெய் குளிக்க வேண்டும் என்பது நமது பாரம்பரியம். ஆனால் அதையே தீபாவளி தினத்தில், எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்தால் புண்ணியம் என்கின்றன நமது சாஸ்திரங்கள். ஏனெனில் அன்றைய தினத்தில், எண்ணெயில் திருமகளும், வெந்நீரில் கங்கையும் வாசம் செய்வதாக ஐதிகம். இதனால் தீபாவளி தினத்தில் எண்ணெய் குளியல் செய்பவர்களுக்கு கங்கையில் மூழ்கிக் குளித்த புண்ணியம் கிடைக்கும்.

தீபாவளிக்கு புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் இவை எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் கங்கா ஸ்நானம். எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு ஏன் கங்கா ஸ்நானம் என்கிறோம்? அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து தலைமுழுகினால், அதுவரை நாம் செய்த பாவங்கள் எல்லாம் போய்விடும் என்பது நம்பிக்கை.ராமர் வனவாசம் முடித்து அயோத்தி திரும்பிய தினம். கிருஷ்ணன், நரகாசுரனை அழித்த தினம்.

அன்றைய தினத்தில் சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலைகளிலும் கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் . இதன்படி, அன்று வீடுகளில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும், கங்கை நீராகவே பாவிக்க வேண்டும். இதனால் தான், தீபாவளியில் அதிகாலையில் நீராடுவதை கங்காஸ்நானம் ஆச்சா என்று கேட்கிறார்கள்.

Trending News

Latest News

You May Like