1. Home
  2. ஆரோக்கியம்

உடல் எடை குறைப்பவர்கள்...சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய மீன் இது..!

1

ஊளி மீன்களில் வைட்டமின் B 12 அதிகம் உள்ளது.. இது நரம்பு செயல்பாட்டை வெகுவாக ஊக்குவிக்கும் திறன் கொண்டது.இதைத்தவிர, ஏகப்பட்ட புரோட்டீன்களை கொண்டிருக்கிறது இந்த ஊளி மீன்கள்.. அதாவது, 3-அவுன்ஸ் ஊளி மீனில், 22 கிராம் புரோட்டீன் இருக்கிறதாம். இத்துடன், ஒமேகா 3 கொழுப்பு நிறைந்திருப்பதால், சத்து நிறைந்த உணவாக திகழ்கிறது. இது பக்கவாதம், மாரடைப்பு போன்ற அபாயங்களை தடுத்து, இதயத்துக்கு முழுமையான பாதுகாப்பை தருகிறது.

உடல் எடை குறைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், பயமின்றி சாப்பிடக்கூடிய மீன் இதுவாகும்.. கால்சியம் நிறைந்த மீன் என்பதாலும், மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடியது என்பதாலும், வளரும் பிள்ளைகளுக்கு கட்டாயம் ஊளி மீன்களை தர வேண்டும்.. ஊளி மீன்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடல் சோர்வு வருவதில்லை.. நுரையீரல் பிரச்சனைகள் நெருங்குவதில்லை..

அடிக்கடி ஊளி மீன்களை சாப்பிட்டு வந்தாலே, உடலில் வீக்கத்தை குறைத்துவிடலாம் என்கிறார்கள்.. ரத்தக் கட்டிகள் உருவாவதை தடுப்பதில் ஊளி மீன்களின் பங்கு மகத்தானது.. இதனால், பக்கவாதம் அபாயமும் குறைகிறது.. பாக்டீரியா, வைரஸ் போன்ற உணவுகளினால் ஏற்படும் சிலருக்கு அலர்ஜி ஏற்படும்.. அந்த தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சிறந்த மருந்தாக ஊளி மீன்கள் திகழ்கின்றன.

மத்தி மீனில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால், நரம்பு மண்டலத்தையும் சிறப்பாக செயல்பட தூண்டுகிறதாம்.

மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மனச்சோர்வு, பதட்டம் நீங்குவதுடன், பிற மனநல கோளாறுகளின் அபாயத்தையும் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சருமத்துக்கும், முடி வளர்ச்சிக்கும் இந்த மீன் மிகவும் நல்லது..

ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் ஊளி மீன்களுக்கு பெரும்பங்கு உள்ளது.. அத்துடன், பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஊளி மீன்களை சாப்பிடுவது மிகவும் நல்லது என்கிறார்கள்.. கண்களை பாதிக்கக்கூடிய நோய்கள் அண்டுவதில்லை.. குடல் புண்களும் சரியாகிவிடும்.

மேலும், சரும பாதுகாப்பு, தலைமுடி உறுதித்தன்மை, தோல் அழற்சி, கண் சம்பந்தமான பாதிப்புகள் ஆகியவற்றுக்கு அருமருந்தாக ஊளி  மீன்கள் விளங்குகின்றன.

Trending News

Latest News

You May Like