கண்ணை கண் போல் பாதுகாப்போம்...

குறைபாடோடு படிப்பது, எழுதுவது, விளையாடுவது, டீவி பார்ப்பது என்று இருக்கி றார்கள். பாதிப்புகள் தீவிரமாகும் போதுதான் அவர்களது குறைபாடு வெளியே தெரிய ஆரம் பிக்கிறது, குழந்தையின் பார்வைத் திறனைக் கவனிக்காவிட்டால் ...

கண்ணை கண் போல் பாதுகாப்போம்...
X

மீன் விழியாள், கோலிக்குண்டு கண்கள் எல்லாம் கண்ணாடி என்னும் கதவுக்கு பின் களையிழந்து நிற்கிறது. நீரின்றி அமையாது உலகு என்பது போல் கண்ணாடி இன்றி இல்லாத குழந்தைகளையும், பெரியவர்களையும் விரல் விட்டு எண்ணிவிடலாம். தடிமனான கண்ணாடி இல்லாத கரு விழிகளுக்குள் லென்ஸ் அணிந்தவர்களும் அதிகமாக இருக்கலாம்.

உணவுமுறைகளில் மாற்றமும், ஓய்வில்லா கண்களுக்கான பணியும் கூட இன்று பார்வைக் குறைபாட்டை அதிகரித்திருக்கிறது. கிட்டப்பார்வை தூரப்பார்வை, மந்தமான பார்வை, கண்ணில் பூ விழுதல், புரை, சதை வளர்தல், கண்களில் இருக்கும் மெல்லிய நரம்பில் இரத்தம் உறைதல், கண் நோய், கண் கோளாறால் தலைவலி, மாலைக்கண் நோய், கண்ணில் நீர் வடிதல், வெள்ளெழுத்து இன்னும் கூட கண் நோய்களைப் பற்றி சொல் லிக் கொண்டே போகலாம்
கண் குறைபாட்டை கொண்டவர்கள்ஆரம் பநிலையிலேயே மருத்துவரை அணுகினால் நாளடைவில் பார்வை குறைபாடு நீங்க வாய்ப்பு உண்டு. உலகில் கண்ணாடி அணிவோரின் எண்ணிக்கை 400 கோடியைத் தொட்டு விட்டதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பார்வைக் குறைபாடு குழந்தை முதல் பெரியோர்கள் வரை ஒருவரையும் விட்டுவைக்கவில்லை.

பள்ளிக்குழந்தைகள் கண்ணாடி அணிவது அதிகரித்து வருகிறது. காரணம் குழந்தைகள் தங்கள் பார்வை குறைபாட்டைப் புரிந்து கொள்வதில்லை. அந்தக் குறைபாடோடு படிப்பது, எழுதுவது, விளையாடுவது, டீவி பார்ப்பது என்று இருக்கிறார்கள். பாதிப்புகள் தீவிரமாகும் போதுதான் அவர்க ளது குறைபாடு வெளியே தெரிய ஆரம்பிக்கிறது, குழந்தையின் பார்வைத் திறனைக் கவனிக்காவிட்டால் மேலும் மேலும் பாதிப்புக்குள்ளாகும் என்று கண் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

குழந்தைகள் அடிக்கடி தலைவலி, கண்வலி என்று சொல்லும்போது தாமதிக்காமல் உடனடியாக கண் மருத்துவரை அணுகுவது நல்லது. இயன்ற வரை கண்களுக்கான வேலைகளைக் குறைத்து கண்களுக்கும் ஓய்வு கொடுப்பது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். கண்களைக் கூச செய் யும் அளவுக்கு செல்ஃபோன், வீடியோ கேம், டீவி, கம்ப்யூட்டர் என்று தூங்கும் நேரம் தவிர இதர நேரம் அனைத்திலும் கண் களுக்கு வேலை கொடுக்கிறோம். ஓய்வில்லாமல் வேலை கொடுப்பதாலேயே கண்களில் குறைபாடு உண்டாகிறது. கல்லீரல், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றாலும் கண்ணில் குறைபாடு உண்டாகும்.

கண் குறைபாட்டுக்கும் உணவுமுறைக்கும் கூட சம்பந்தம் உண்டு: வைட்டமின் ஏ அதிகமுள்ள கேரட்,பீட்ரூர், பூசணி, வெண்டைக்காய், பசும் பால், மோர், தயிர், முளை கட்டிய தானியங்கள், கீரைகள், பப்பாளி, மாம்பழம்,பேரீச்சை, நெல்லிக்காய், போன்றவற்றை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். அதிக வெளிச்சம் உள்ள பகுதிகளை வெறும் கண்களால் பார்க்க கூடாது.

அலுவலகங்களில் கணினி பணியில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கணினி திரையைப் பார்க்காமல் அவ்வப்போது 10 நிமிடம் இடைவெளி எடுத்து கண்களைச் சிமிட்டி குளிர்ந்த நீரால் கழுவுவதும் கண்களைப் பாதுகாக்கும். ஆரம்பத்தில் கண்டறியப்படும் மைனஸ்,ப்ளஸ் வித்தியா சம் எல்லாம் நாளடைவில் சத்தான ஆகாரங்களோடு சரி செய்யப்பட்டு விடும்.

newstm.in

newstm.in

Next Story
Share it