1. Home
  2. ஆரோக்கியம்

வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைத் தீர்க்கும் நீர்...மோர்...!

வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைத் தீர்க்கும் நீர்...மோர்...!


எந்த விருந்தும் மோர் இன்றி நிறைவு பெறுவதில்லை. விலைமிக்க பொருள்களான சத்துமிக்க பானங்களும்... செயற்கையாக தயாரிக்கப்பட்ட குளிர் பானங்களும் கொடுக்காத சத்தை மோர் எளிதாக கொடுத்துவிடுகிறது. வயிறு புடைக்க உண்டு நெஞ்சுவரை தவிக்கும் நேரத்தில் ஒரும்ளர் மோர் அருந்தினால் உடல் உறுப்புகள் சுறுசுறுப்படைந்து ஜீரணத்தை எளிதாக்குகின்றன. இந்த மோரின் சுவைக்கு ஈடு எதுவுமில்லை.

விருந்தினர்களுக்கு காபி, டீ, குளிர்பானங்கள் எல்லாம் காலமாற்றத்தால் கொடுக்கப்பட்டது. முந்தைய தலைமுறையில் எலுமிச்சைச்சாறு, கருப்பட்டி கலந்த பானகம், நீர்மோர் இவைதான் விருந்தினர்களை குளிர்ச்சியாக்க கொடுக்கப்பட்டது. வைட்டமின் பி 2 - ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி 12, வைட்டமின் 1, வைட்டமின் சி 4 கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், துத்தநாகம், பொட்டாசியம், இரும்புச் சத்துகள் போன்றவை நிறைந்திருக்கின்றன.

செரிமானத்தைத் தூண்டும் வகையில் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வயிற்றில் எரிச்சல், இரைப்பை குடல்நோய்கள் போன்றவற்றுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. நோய்த்தொற்றிலிருந்து நம்மை பாதுகாப்பதிலும் சிறந்து விளங்குகிறது. மோரில் இருக்கும் கால்சியம் உடல் எலும்புகளை உறுதிப்பெற செய்கிறது. நீர் மோரில் இருக்கும் பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நமது உடல் 80 சதவீதம் நீரால் நிறைந்திருக்கிறது. நீர்ச்சத்து பற்றாக்குறையில் உடல் நலக் குறைவு ஏற்படும்போது நீரிழப்பை ஈடு செய்ய விரைவில் கை கொடுப்பது நீர்மோர். காரம் மிக்க மசாலா உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றெரிச்சல் உண்டாகும். சாப்பிட்டு முடித்ததும் ஒரும்ளர் மோர் அருந்தினால் மோரில் இருக்கும் புரதமானது காரத்தைக் குறைத்து வயிற்று எரிச்சலைத் தணிக்கும்.

உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் உணவு வகைகளைக் குறைத்து கடுமையான டயட்டில் இருந்தால் உடல் சோர்வு பிரச்னை உண்டாகும் ஆனால் தயிர் சேர்க்காமல் அன்றாடம் இஞ்சி கலந்து தாளித்த நீர் மோரை உட்கொண்டால் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவைக் குறைப்பதோடு உடலில் சோர்வையும் உண்டாக்காது.

இயல்பாகவே உடல் உஷ்ணம் கொண்டிருப்பவர்கள் அன்றாடம் ஒரும்ளர் நீர் மோரை எல்லா காலங்களிலும் உட்கொண்டால் உஷ்ணத்தால் வரும் மூலநோய் தடுக்கப்படும். வாய்ப்புண் தொடர்ந்து தீவிரமாக இருந்தால் வயிற்றில் புண் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். கோடையில் உடல் உஷ்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் தினமும் 2 டம்ளர் நீர் மோர் உஷ் ணத்தை அண்டவிடாது. கோடையில் கோயில்களிலும், ஆங்காங்கே சாலைகளிலும் நீர்மோர் பந்தல் அமைப்பதை முன்னோர்கள் தொடர்ந்ததை இன்றும் கடைப்பிடிக்கிறோம் என்றால் காரணம் நீர்மோரில் உள்ள சத்துக்கள் தான்.

தயிரை நீர் விடாமல் மோராக்கினால் பயனில்லை. ஒரு கப் தயிரை மோராக்கி.. ஒரும்ளர் மோருக்கு நான்கும்ளர் வீதம் தண்ணீர் விட்டு, இஞ்சியைச் சிறு துண்டுகளாக நறுக்கி, கடுகு, உளுந்து தாளிப்பில் இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து உப்பு போடவும். இதுதான் நீர்மோர்...

Trending News

Latest News

You May Like