எச்சரிக்கை!! ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு

பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் மாவுகள் நிச்சயம் சுகாதாரமான முறையில் தூய்மையாக தயாரிக்கப்பட்டது என்று உறுதியாக சொல்ல முடியாது. அதன் தரத்தை உறுதி செய்ய சான்றிதழ் வரைமுறையும் கிடையாது.

எச்சரிக்கை!! ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு
X

அவசரத்துக்கு டிபன் செய்ய கைகொடுக்கும் உப்புமா காலமெல்லாம் மலையேறிவிட்டது. தடுக்கி விழுந்தால் ரெடிமேட் இட்லி மாவுகள் இருகரம் நீட்டி அழைக்கிறது. இட்லி என்னமோ சுமாராகத்தான் இருக்கிறது. ஆனால் கேடு விளைவிக்கும் பாக்டீரியா கொஞ்சம் கூடவே இருக்கிறது என்கி றார்கள் மருத்துவர்கள்.

நான்கு பங்கு அரிசியுடன் ஒரு பங்கு உளுந்து, ஒரு கை வெந்தயத்தைச் சேர்த்து ஆட்டு உரலில் அரைமணி நேரம் உட்கார்ந்து அரைக்கும் மாவு தான் சத்தான மாவு. இதைத்தான் அம்மாச்சிகளும் அப்பத்தாக்களும் செய்துவந்தார்கள். அரைத்த மாவு புளிக்காமல் இருக்க பானையில் மாவு வைத்து அந்த பானையை தண்ணீரில் வைத்து தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்வார்கள்.

அதாவது இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை மட்டுமே.பால் புளித்து தயிராவது போலவே மாவு புளிப்பதும் ஒரு நல்ல பாக்டீரியாவின் செயலே. அப்படியே மாவு அதிகமாக புளித்தாலும் குழிபணியாரமாகவோ, வெல்ல பணியாரமாகவோ அவர்களது பக்குவத்தில் சுவையாக தயா ராகும்.

இப்படி இயல்பாக செய்த வேலைகள் எல்லாம் இயந்திரமாய் மாறியபோதே ஆபத்தின் முதல் படிக்கு வந்துவிட்டோம்.10 நாட்களுக்கு தேவை யான மாவை பதமாய் கிரைண்டரில் போட்டு வழித்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு நிம்மதியாக இருந்த இல்லத்தரசிகள் இன்று கிரைண்டருக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு பாக்கெட் மாவு வாங்கி பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவு பொருள்கள் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவல்ல. அவற்றில் முக்கியமானது இட்லி/ தோசை மாவு. இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் இல்லாத நோயெல் லாம் வந்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

அலங்கார பாக்கெட் மாவாக இருந்தாலும், தெருமுனை கடையில் பாத்திரத்தில் வாங்கி வந்தாலும் இட்லி மாவு தரமாக தயாரிக்கப்படுகிறதா என்று கவனிப்பது முக்கியம். பெரிய கிரைண்டர்களில் நிறைய மாவை போட்டு விட்டு தேவையான நீரை விட்டு அகன்ற பாத்திரத்தில் வைத்து பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் மாவுகள் நிச்சயம் சுகாதாரமான முறையில் தூய்மையாக தயாரிக்கப்பட்டது என்று உறுதியாக சொல்ல முடியாது. அதன் தரத்தை உறுதி செய்ய சான்றிதழ் வரைமுறையும் கிடையாது. மாவை சரியான அளவில் பாக்கெட் போடும் பணியை செய்பவர்கள் தங்கள் கைகளை நகங்கள் இன்றி சுத்தமாகதான் வைத்திருப்பார்கள் என்பதற்கும் உத்திரவாதம் இல்லை.

எச்சரிக்கை!! ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு

மேலும் ஓய்வு கொடுக்காமல் கிரைண்டருக்கு வேலை கொடுப்பதன் மூலம் கிரைண்டர் கல் தேய்மானம் அடைந்து கண்ணுக்கு தெரியாத துகள் களாக மாவில் கலக்கிறது என்கிறார்கள் உணவு பாதுகாப்பு அதிகாரிகள். முறையாக சுத்தம் செய்யாத கிரைண்டர்களில் அரைக்கப்படும் மாவில் ஈகோலி என்னும் பாக்டீரியாக்கள் உருவாக வாய்ப்புண்டு. மனிதர்கள் மற்றும் விலங்குகளின் கழிவில் இருக்கக்கூடிய இந்த பாக்டீரியா சுகாதார மற்ற முறையில் தயாரிக்கப்படும் மாவில் உருவாகிறது என்று சொல்வது அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. மேலும் மாவு நீண்ட நாள் புளிக் காமல் இருக்க கால்சியம் சிலிகேட் சேர்க்கப்படுவதும் ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

இட்லி மாவில் உற்பத்தியாகும் ஈகோலி பாக்டீரியாவால் வயிறு வலி, வயிறு உபாதை பிரச்னைகளோடு வாந்தி, ஒவ்வாமை,காய்ச்சல், வயிறு உறுப்புகளும் பாதிப்படைகிறது. இயல்பிலேயே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களில் சிலருக்கு இந்த பாக்டீரியா அதிகப்படியாக இரத்த சோகை, சிறுநீரக பிரச்னைகள் போன்றவற்றையும் உண்டாக்கிவிடும் என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது.

இட்லி மாவு வாங்குவதை இயன்றவரை தவிர்ப்பது நல்லது. தவிர்க்கமுடியாத நேரங்களில் அன்று தயாரித்த மாவை வாங்கி பயன்படுத்துங்கள்.
இட்லி ஆரோக்யமானதுதான். ஆனால் இட்லி மாவு?

newstm.in

newstm.in

Tags:
Next Story
Share it