1. Home
  2. ஆரோக்கியம்

அசைவத்திற்கு இணையான சைவ சைட்டிஷ்!

அசைவத்திற்கு இணையான சைவ சைட்டிஷ்!


அசைவப் பிரியர்கள் மட்டும் விதவிதமாக சமைத்து சாப்பிடுவர். நமக்கு எதுவும் வெரைட்டியாக இல்லையே என ஏங்குபவர்களுக்கு இருக்கவே இருக்கிறது பன்னீர். இதனை வேகவைத்து குழம்பு, குருமாக்களில் சேர்க்கலாம். பொரித்து சைட்டிஷ்ஷாகவும் வைத்துக் கொள்ளலாம். சுவை அசைவ உணவு வகைகளை விட பிரமாதமாக இருக்கும்.

சில்லி பன்னீர்:-

பன்னீர் -100 கி
கார்ன் ஃப்ளோர் மாவு-2டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
குடை மிளகாய் - 2
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:-
இஞ்சி பூண்டு விழுது, கார்ன் ஃப்ளோர் மாவு,மிளகுத் தூள் இவற்றை பன்னீருடன் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு பிரட்டிக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்.இதனை மைதா மாவில் பிரட்டி மிதமான தீயில் காய்ந்த எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.அத்துடன் குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெந்து வந்ததும் அத்துடன் பொரித்த பன்னீர் துண்டுகளைப் போட்டு நன்றாக கலந்து விடவும்.
சோயா சாஸ், தக்காளி சாஸ், மற்றும் சில்லி சாஸ் உடன் பரிமாற சூப்பரான சுவையில் அட்டகாசமான சைட்டிஷ் தயார்.

www.newstm.in

Trending News

Latest News

You May Like