1. Home
  2. ஆரோக்கியம்

உஷார்!! மழைக்காலத்தில் இந்த காய்கறிகளில் அதிக கவனம் தேவை!

உஷார்!! மழைக்காலத்தில் இந்த காய்கறிகளில் அதிக கவனம் தேவை!


வெயில் காலம் , காற்றுக் காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கி விட்டது. மழைக்காலம் வந்ததும் பலருக்கும் மழைக்கால வியாதிகள் தான் முதலில் நினைவுக்கு வருகிறது. இந்த நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகளை நமது அன்றாட உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டாலே போதும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும். முழுமையான ஊட்டச்சத்தைப் பெற தினமும் பச்சை காய்கறிகளை சாப்பிடுவது அவசியம்.

ஆனால் பருவமழை காரணமாக காய்கறிகளில் பல வகையான பூச்சிகளின் தொற்றுநோயும் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த பூச்சிகள் மிகவும் நுட்பமாக காய்கறிகளின் நிறத்தில் இருப்பதால் அவை கண்களுக்கு தென்படுவதில்லை வெயில் காலங்களில் சிறு சிறு பூச்சிகள் சூரிய வெப்பத்தின் காரணமாக அவை இறந்து போகும் வாய்ப்புக்கள் அதிகம் ஆனால் மழைக்காலத்தை பொறுத்த வரை பிரகாசமான சூரிய ஒளியே குறைவான நேரம் மட்டுமே இருப்பதால் பாக்டீரியா தொற்று வேகமாக அதிகரிக்கும் வாய்ப்புக்கள் அதிகம். அவை முறையாக சுத்தம் செய்யப்படாவிட்டால், அவை வயிற்றை அடைந்து பல்வேறு செரிமானப் பிரச்சனைகளையும், சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம். குறிப்பாக வயிற்று வலி, பிடிப்புகள், வயிற்றுப்போக்கு,வாந்தி, நீரிழப்பு, குடல் தொற்று போன்றவை ஏற்படலாம்.

குறிப்பாக முட்டைக்கோஸ், கீரை வகைகள், முள்ளங்கி, வெண்டைக்காய் மற்றும் கசப்பு காய்வகைகளும் சுகாதாரக் குறைபாட்டை ஏற்படுத்தவல்லவை. மேலும் செரிமானம் ஆகவும் அதிக நேரம் எடுக்கும் என்பதால் இவற்றை உண்பதை தவிர்க்கலாம்.

Trending News

Latest News

You May Like