1. Home
  2. ஆரோக்கியம்

உஷார்!! சமையல் எண்ணெய்யை இப்படி பயன்படுத்தாதீங்க!?



குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பிடித்த உணவாக அமைந்துள்ளது பொரித்த உணவுகளே. வீடுகளில் மட்டுமல்ல எங்கு வெளி இடங்களுக்கு சென்றாலும் பொரித்த உணவுகளையே ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். இதில் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் பலர் சமையல் எண்ணெய்யை பயன்படுத்தி மீண்டும் உணவு தயாரிக்கின்றனர். அப்படி சமைக்கும் போது ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயில் நிறைதிருக்கும் கொழுப்புக்கள் மீண்டும் சூடுபடுத்தப்படும்போது எதிர்வினை புரிந்து உடலுக்கு கேடு விளைவிக்கலாம்.

தீராத நோய்களுக்கு இவையே முன்னோடி. உடலில் அலர்ஜி ஏற்படலாம். உடலில் இருக்கும் ஆரோக்கியமான செல்கள் கூட ஆரோக்கியமற்றவையாக மாறி விடக்கூடும். இதனால் உடல் பருமன், இதய நோய், நீரிழிவு போன்ற நோய்கள் உருவாகலாம்.

அதிக வெப்பநிலையில் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதால் பயன்படுத்துவதற்கு தகுதியற்றதாக மாற்றிவிடும். மேலும் இதிலிருக்கும் நச்சுத்தன்மை இதய நோய், உடல் பருமன், புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் கோளாறு, நீரிழிவு போன்ற நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.

தற்காலத்தில் பலரும் எண்ணெய்யில் பொரித்த, வறுத்த உணவுகளை சாப்பிடுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். 48 சதவீதம் பேர் வாரத்தில் 6 முறையாவது எண்ணெய்யில் தயாராகும் பொரித்த உணவுகளை சாப்பிட்டு வருகின்றனர்.

குறிப்பாக கர்ப்பிணிகள் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மீண்டும் நிச்சயமாக பயன்படுத்தவே கூடாது. இதனால் கருவில் வளரும் குழந்தையும் பாதிக்கப்படலாம். இதனால் கர்ப்ப காலத்தில் வழக்கத்தை விட கூடுதல் எடை அதிகரிப்பு, இதய நோய் போன்ற பிரச்சினைகள் உருவாகலாம்.

இதனால் வயிறு அல்லது தொண்டை பகுதியில் எரிச்சல் , அசிடிட்டி பிரச்சினையும் உண்டாகும். உணவகங்களில் நாம் ஆர்டர் செய்யும் பெரும்பாலான துரித உணவுகள் ஏற்கனவே உபயோகித்த எண்ணெயில் தான் வறுக்கப்படுகிறது. இதனால் தான் இவை தவிர்க்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like