தாங்க முடியாத பல் வலியா? இதைச் செய்து பாருங்க!!

தாங்க முடியாத பல் வலியா? இதைச் செய்து பாருங்க!!

தாங்க முடியாத பல் வலியா? இதைச் செய்து பாருங்க!!
X

நிறைய நேரம் பல் துலக்குவதாலும், மிகவும் கடினமான பிரஷ்களால் பற்கள் தேய்ப்பதாலும் பற்களின் எனாமல் காணாமல் போய் விடுகிறது. இந்த எனாமல் குறைவதால் தான் பற்கள் கூச்சம் அடைந்து தாங்க முடியாத வலியை உருவாக்குகின்றன.

வீட்டிலிருந்தே எளிமையான வழிகளில் பல் வலியை தீர்க்கலாம்.பல்வலியில் ஆரம்பித்து தலைவலியாக மாறி குத்த ஆரம்பிக்கும். இதற்கு ஒரு சின்ன வெங்காயத்தையோ வட்ட வடிவில் வெட்டி அதை பற்களுக்குக் கீழே வைத்துக் கொண்டிருந்தால் போதும். தலைவலியுடன் பல்வலியிலிருந்தும் விடுபடலாம்.
பல்வலி ஆரம்பகட்டத்தில் இருக்கும் பட்சத்தில் சின்ன வெங்காய சாறை மென்று விழுங்கினாலே போதுமானது.

பஞ்சில் கிராம்பு எண்ணெய் தோய்த்து பல் வலி இருக்கின்ற இடத்தில் வைத்து நன்கு அழுத்தி மசாஜ் செய்தால் உடனடி நிவாரணத்தைப் பெற முடியும்.வெள்ளரிக்காயை ஸ்லைஸ்கள் செய்து அதை பற்வலி இருக்கும் இடத்தில் வைக்கலாம்.தாங்க முடியாத வலியாக இருந்தால் இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்து மென்று அதன் சாறு பட்டு வலி குறைய ஆரம்பிக்கும்.

பல் வீக்கத்திற்கு பாக்கெட் டீ பேக்கை சூடான தண்ணீரில் வைத்து எடுத்து வீக்கம் உள்ள இடத்தில் வைக்க விரைவில் சரியாகும்.

newstm.in

Next Story
Share it