குழந்தைப் பேறு வேண்டுபவருக்கு அருமருந்தாக செவ்வாழை...

செவ்வாழை ஒன்றுல் 4கிராம் அளவுக்கு நார்ச் சத்துக்களையும் உள்ளடக்கியிருக்கிறது. இரத்த அணுக்களின் குறைபாட்டைச் சரி செய்து சீராக் குகிறது. உடலில் இருக்கும் நோய் தொற்று களை அழிப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது...

குழந்தைப் பேறு வேண்டுபவருக்கு அருமருந்தாக செவ்வாழை...
X

உடலுக்கு நன்மை தருவனவற்றில் பழங்களும் ஒன்று.அதிலும் எல்லாக்காலங்களிலும் கிடைக்ககூடிய பழங்கள் என்றால் வாழைப்பழம் தான். அன்றாடம் சாப்பிட்டு முடித்ததும் ஒரு பழத்தைக் கட்டாயம் சாப்பிடசொல்வார்கள் நம் முன்னோர்கள். காலைக் கடனை கழிக்க பெரிதும் உதவி புரிவது இந்த வாழைப்பழம்தான்.

வாழைப்பழங்களில் பூ வாழை, மொந்தை வாழை, பேயன் வாழை, ஏலக்கி, கற்பூர வாழை, ரஸ்தாளி, பச்சை வாழை என்று பல வகைகள் உண்டு. அவற்றில் ஒன்று செவ்வாழை. கண்களைப் பறிக்கும் நிறத்தில் பார்க்கவே அழகாக இருக்கும் செவ்வாழை உடல் ஆரோக்யத்திலும் அழகை சேர்க் கிறது.

என்னவெல்லாம் இருக்கிறது செவ்வாழையில்:
இதன் விலை சற்றே அதிகம் என்றாலும் இது கொடுக்கும் பலன்கள் ஏராளம். அதிக சத்துக்களைக் கொண்டிருக்கும் இப்பழத்தில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. மற்ற பழங்களை விட இதில் கலோரிகளும் குறைவாக இருக்கிறது. இதில் பொட்டாசியம் நிறைந்தி ருக்கிறது. புரதம்,ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் போன்ற பலவிதமான சத்துக்களும் கொண்டிருக்கின்றன.

உடலில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உறிஞ்சப்பட்டு எலும்புகளை பலப்படுத்துகிறது.செவ்வாழை ஒன்றுல் 4கிராம் அளவுக்கு நார்ச்சத்துக்க ளையும் உள்ளடக்கியிருக்கிறது.இரத்த அணுக்களின் குறைபாட்டைச் சரி செய்து சீராக்குகிறது.உடலில் இருக்கும் நோய் தொற்றுகளை அழிப்ப தில் முக்கிய பங்குவகிக்கிறது செவ்வாழை.

குறைபாடுகளைக் களையும் செவ்வாழை:
கண்பார்வை குறைபாட்டைச் சரி செய்வதிலும்…கண் பார்வையைக் கூர்மைப்படுத்துவதிலும் சிறப்பான மருத்துவக்குணங்களைக் கொண்டிருக் கிறது செவ்வாழை. கண்பார்வை குறைபாடு இருப்பவர்கள் தினசரி செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மாலைக்கண் நோய் பாதிப்பு கொண்டவர்கள் இரவு சாப்பிட்டு முடித்ததும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் 40 நாள்களில் நல்ல பலன் தெரி யும்.

சருமத்துக்கு அழகூட்டும்:
சருமத்தில் சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்றவைக்கு சிறந்த தீர்வு செவ்வாழை.தொடர்ந்து சாப்பிட்டால் சருமப்பிரச்னைகள் தீர்வதோடு சருமத்துக்கு மினுமினுப்பும் கொடுக்கும்.

கருத்தரித்தலையும் ஆண்மையையும் பெருக்கும்:
நரம்புகள் பலவீனமானால் உடலில் பலம் குறைந்து ஆண்மை குறைபாட்டை உண்டாக்கும். நரம்புகள் பலம் பெற்று ஆண்மை அதிகரிக்க செவ் வாழை சாப்பிடலாம்.மருத்துவப்பரிசோதனையில் எவ்வித குறைகளுமின்றி குழந்தைப்பேறு வேண்டிதவமிருக்கும் தம்பதியர்ஒரு மண்டல கால அளவு செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் கருத்தரிப்பு நிச்சயமாகும்.

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும் செவ்வாழை:
இரத்தத்தைச் சுத்திகரித்து தூய்மையாக்குகிறது. இரத்தஓட்டத்தைச் சீராக்குகிறது. இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதில் முக்கியபங்கு செவ்வாழைக்கு உண்டு. இன்றைய இளம்பெண்கள் உடலைக் கட்டுகோப்பாக வைத்திருக்கிறேன் என்று சத்துக்களை இழந்து வருகிறார்கள். குறிப் பாக ஹீமோகுளோபின் குறைபாடுகளைச் சந்திக்கும் இவர்கள் தினசரி செவ்வாழைப்பழத்தை எடுத்துக்கொள்வது நல்லது.

பல் சம்பந்தமான அனைத்து நோய்களையும் குணமாக்க வல்லது. சாக்லெட் இனிப்புகளில் மயங்கி இளவயதில் சொத்தையை உண்டாக்கி கொள் ளும் குழந்தைகளுக்கு சிறுவயது முதலே செவ்வாழை கொடுத்து வருவதுநல்லது. இனிவாழைப்பழம் வாங்கும் போது செவ்வாழை என்று கேட்டு வாங்குங்கள்.


newstm.in

newstm.in

Next Story
Share it