காசநோய் தடுப்பு முறை

காசநோயாளிகளை காற்றோட்டமுள்ள அறையில் தங்க வைப்பதன் மூலம் அவர்களிடம் இருந்து வெளிப்படும் பாக்டீரியா வெளியே சென்றுவிடும். எனவே, வீட்டில் உள்ளவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். மற்றப்படி காச நோயாளிகள் பயன்படுத்திய பொருட்களை யாரும் பயன்படுத்தலாம். அவர்களைத் தனிமைப்படுத்த தேவையில்லை.

காசநோய் தடுப்பு முறை
X

உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்நோயால் தாக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 80 - 90 இலட்சம் மக்கள் இத்தொற்று நோய்க்கு உள்ளாவதாகவும் உலகச்சுகாதார நிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நொடியிலும் புதிதாக ஒருவர் இந்நோய்த் தாக்கத்திற்குள்ளாவதாக கூறப்படுகிறது. இந்நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகும் மனிதர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

இந்நோய் பொதுவாக டி.பி (TB) எனக் குறிப்பிடப்படுகிறது. TB என்பது Tubercle bacillus (டியூபர்க்கில் பாசிலசு)அல்லது TUBERCULOSIS (டியூபர்க்குலோசிசு) என்பதன் சுருக்கமாகும். இந்நோயை முற்றிலும் அழிக்க கூடிய மருத்துவ முறைகளை அறிவியலாளர்கள் கண்டு பிடிக்கவில்லை என்றே கூறலாம்.

காசநோய் தடுப்பு முறை

காச நோயால் பாதிக்கப்படும் உறுப்புகள்:

காச நோயானது பொதுவாக நுரையீரலைத் தாக்கி நோயுண்டாக்கினாலும், இவை நரம்பு மண்டலம், நிணநீர்த் தொகுதி , இரைப்பை-குடல் , எலும்புகள் மற்றும் மூட்டுகள், ரத்த‌ச் சுழற்சிப்பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பற்பல பகுதிகளிலும் நோயுண்டாக்க வல்லவை.

காசநோயை தடுக்கும் முறைகள்:

காசநோயாளிகளை காற்றோட்டமுள்ள அறையில் தங்க வைப்பதன் மூலம் அவர்களிடம் இருந்து வெளிப்படும் பாக்டீரியா வெளியே சென்றுவிடும். எனவே, வீட்டில் உள்ளவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். மற்றப்படி காச நோயாளிகள் பயன்படுத்திய பொருட்களை யாரும் பயன்படுத்தலாம். அவர்களைத் தனிமைப்படுத்த தேவையில்லை.

காசநோய் தடுப்பு முறை

1905-1921 ஆண்டுகளுக்கிடையில் காசநோய்க்கெதிராக கண்டுபிடிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து BCG ஆகும். இதுவே குழந்தைகளில் பெருமளவில் பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்தாகுமம், இத்தடுப்பூசியினை 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பி.சி.ஜி. தடுப்பூசி போட வேண்டும்.

காசநோயாளிகள் உள்ள வீட்டில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பு மருந்து சாப்பிட வேண்டும்

பா.கா.கு (BCG) தடுப்பூசி குழந்தை பிறந்து நான்கு கிழமைக்குள் கொடுக்கப்பட வேண்டும். ஊசி போட்டவுடன் தழும்பொன்று உருவாகும். இத்தழும்பு உண்டாகாதவிடத்து ஆறுமாதத்திலிருந்து , ஐந்து வயதிற்குள் இவ்வூசியை மீண்டும் போட்டுக்கொள்ள‌ வேண்டும்.

மூன்று தினங்களுக்கு மேல் இருமல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

மக்கள் நெரிசல் அதிகம் உள்ள இடங்கள், சூரிய வெளிச்சம் உள்வராத வீடுகள்,போன்ற இடங்களில் இந்நோய் பரவ‌ அதிக வாய்ப்புள்ளது.

ஊட்டசத்து குறைபாட்டால் இந்நோய் தொற்ற அதிக வாய்ப்புள்ளது, எனவே சத்துக்கள் மிகுந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பசும்பாலினால் பரவும் காசநோயைத் தவிர்க்க நன்கு கொதிக்க வைத்த பால் அல்லது பாய்ச்சர் (Pasteur) முறையில் பதனிடப்பட்ட பாலை அருந்த வேண்டும்.

மதுகுடித்தல் ,புகைப்பிடிப்பதல் போன்ற பழக்கங்களால் காசநோய் தொற்ற அதிக வாய்ப்புள்ளது , இப்பழக்கங்களை அடியோடு தவிர்க்க வேண்டும்.

newstm.in

Next Story
Share it