நோய் நொடியின்றி 'பல்லாண்டு' வாழ 'பல்' பாதுகாப்பு மிக அவசியம் 

நோய் நொடியின்றி 'பல்லாண்டு' வாழ 'பல்' பாதுகாப்பு மிக அவசியம்

 நோய் நொடியின்றி பல்லாண்டு வாழ பல் பாதுகாப்பு மிக அவசியம் 
X

வீட்டின் நுழைவாயிலை தலைவாசல்படி என்பது போல், உடலின் நுழைவாயில் வாய்பகுதிதான். பல்லாண்டு வாழ்க என்று சொல்வது போல், பல் ஆண்டு பல வாழவேண்டும் என்பதும் முக்கியமானது. வாய்ப்பகுதி ஆரோக்யமாக இல்லாவிட்டால் உடலும் ஆரோக்யமாக இருக்காது என்கிறார்கள் மருத்துவர்கள்.

வாய் பராமரிப்பு என்று சொன்னதுமே பற்கள் தான் நினைவுக்கு வருகிறது. நமது குரல் வளையில் இருந்துவரும் காற்றுகள் பற்களின் இடுக்குகளில் நுழைந்து மோதி வெளிவரும்போது குரல் உண்டாகிறது. பற்களின் ஆரோக்யம் காத்தால் பின்னாளில் பலவிதமான நோய்களிலிருந்தும் தப்பித்துக்கொள்ளலாம்.

ஒருவரது முக அழகுக்கு பற்களின் சீரான அமைப்பும் காரணமாக இருக்ககூடும். அதோடு வயிறு கோளாறுகள், நீரிழிவு, இதயநோய்களின் தீவிரம் அதிகரிக்கும் போது இந்த பாதிப்புகளின் அறிகுறியை வாய் மற்றும் பற்களில் பிரதிபலிக்கும்.

பற்களில் கூச்சம், சொத்தை, பல் வலி, ஈறுகளில் இரத்தக்கசிவு, ஈறுகளில் வலி, ஈறுகளில் வீக்கம், வாய்துர்நாற்றம், வாய்ப்புண் போன்றவை பொதுவாக ஏற்படும் நோய்கள். சொத்தை பற்கள் பிரச்னையை சந்திக்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் சொத்தை அதிகரிக்கும் போது, அது பற்களின் வேர்ப்பகுதியைத் தாக்கி கடுமையான வலியை உண்டாக்கும்.
பற்களை சரியான முறையில் தேய்க்காமல் போனால் பற்களின் இடுக்குகளில் உள்ள கிருமிகள் வெளியேறாமல் பற்களில் அடைத்துக்கொள்ளும். பிறகு இது நாளடைவில் துர்நாற்றத்தை உண்டாக்கும். காலையில் எழுந்ததும் பல் தேய்க்காமல் காபி, டீ. போன்ற பானங்களை அருந்துதல் கூடாது.
குழந்தைக ளுக்கும் அவ்வாறு பழக்க கூடாது. சிறுவயது முதலே குழந்தைகளை இரு வேளை பல்துலக்க பழகுதல் நல்லது.
காலை எழுந்ததும் பல்துலக்கி ஒரு தம்ளர் நீர் அருந்திய பிறகே எதை யும் சாப்பிடவேண்டும். இரவு உணவு முடித்ததும் பல் துலக்கிய பிறகே உறங்க செல்ல வேண்டும்.
அதிக சூடு அல்லது அதிக குளிர்ச்சியான பானங்களை, உணவுப் பொருள்களை சேர்க்க கூடாது. அடிக்கடி மிகக் கடினமான பொருள் களை கடிக்க கூடாது. பொதுவாக இனிப்பு அதிகம் சாப்பிட்டால் சொத்தை பற்கள் உண்டாகும் என்று சொல்வார்கள். ஆனால் இனிப்பு மட்டும் இதற்கு காரணமாக சொல்லமுடியாது.
எந்த உணவுப்பொருளை எடுத்துக்கொண்டாலும் சாப்பிட்டு முடித்ததும் கண்டிப்பாக வாய் கொப்பளிப்பது நல்லது. மிதமான சூடு பொறுக்கும் வெந்நீரில் கல் உப்பு இரண்டை போட்டு வாய் கொப்புளித்தால் எந்தவிதமான கிருமிகளும் பற்களில் தங்காது.
பற்களைச் சுத்தம் செய்ய பயன்படுத்தும் பிரஷ்களை மூன்று மாதத்துக்கு ஒருமுறையாவது மாற்ற வேண்டும்.
பற்கள் வெண்மையாக இருந்தால் தான் அது ஆரோக்யமான பற்கள் என்றும் மஞ்சள் நிறமாக இருந்தால் அது ஆரோக்யமற்ற பற்கள் என்றும் சிலர் தவ றாக புரிந்திருக்கிறார்கள். ஆனால் பற்கள் எப்படி இருந்தாலும்சுத்தமாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது. குழந்தைகள் வளர்ந்து 10 வயதுக்குள்ளா கவே பால் பற்கள் விழுந்து முளைக்க வேண்டும். இல்லையென்றால் பல் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது நல்லது.

பற்களின் வளர்ச்சியில் அதிகப்படியான மாற்றம், ஒழுங்கற்ற வரிசை, சொத் தைப்பற்கள் போன்ற குறைபாடுகள் இருந்தால் தான் பல்மருத்துவரை அணுக வேண்டும் என்பதில்லை. ஆறுமாதங்களுக்கு ஒருமுறை பல்மருத்து வரை அணுகி பற்களைச் சுத்தம் செய்து கொண்டால் பற்களின் ஆரோக்யம் மேம் படும்.
newstm.in

newstm.in

Next Story
Share it