1. Home
  2. ஆரோக்கியம்

இன்று சண்டே...! மீன் வாங்கும் போது இந்த மீனை மறக்காம வாங்குங்க..!

1

தொடர்ந்து மீன் உணவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது. மீனில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.

மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மீன் உண்ணும் குழந்தைகளுக்கு  ஆஸ்த்துமா நோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. மீனை அதிகம் சாப்பிடுபவர்கள் மன அழுத்தம் ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.

மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.

பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் சாப்பிடுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க மீன் பயன்படுகிறது. பெண்கள் மீனை அதிக அளவில்  சாப்பிடுவதால் எலும்புகள் பலமடைந்து பிரசவ நேரத்தில் வலியை தாங்கும் சக்தியை கொடுக்கிறது.

நெத்திலி : நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், கண் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

சுறா: குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா மீனை புட்டு செய்து சாப்பிட்டால், தாய் பால் சுரக்கும்.

மத்தி மீன்: ஏழைகளின் உணவு எனப்படும் மத்திமீனில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த மீன் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. தோல் நோய், மூளை நரம்பு பாதிப்பு, மன அழுத்தம், முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் வராமல் அதை தடுக்கிறது.

வஞ்சிரம்: பெரும்பாலான ஹோட்டல்களிலும், வீடுகளிலும் வஞ்சிரம் மீனுக்கு ஒரு தனி இடம் உண்டு. வஞ்சிர மீனை தொடர்ந்து சாப்பிடுவதால் இதயம் பலம் அடைவதுடன், சைனஸ் பிரச்சினையுடையவர்களுக்கு இது நல்ல மருந்து. வஞ்சிர மீனில் ஒமேகா 3 என்ற சத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கானாங்கெளுத்தி: இந்த வகை மீனை அடிக்கடி உண்டால் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு குறையும். அதிலும் வாரம் 4 முறை இதனை உட்கொள்வது நல்ல பலனைத் தரும். கேரளாவில் மிகவும் புகழ்பெற்ற மீன்வகை இது!

மத்தி, சங்கரா போன்ற ஒமேகா-3 அதிகம் உள்ள மீன்களில் இருந்து மீன் வாடை அதிகம் வருவதாலும், அவற்றில் முள் அதிகம் உள்ள காரணத்தாலும் பெரும்பாலானோர் அவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்கின்றனர். உண்மையில் பெரிய மீன்களில் உள்ளவற்றைக் காட்டிலும் இவற்றில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன. ஆற்று மீன்களோடு ஒப்பிடும்போது கடல் மீன்களில் சிறிது உப்பு அதிகமாக இருக்கும் என்பது உண்மைதான் என்றாலும் அவை உடல் ஆரோக்கியத்தை ஒருபோதும் பாதிக்காது.

Trending News

Latest News

You May Like