1. Home
  2. ஆரோக்கியம்

இன்று சண்டே..! மறக்காம மீன் வாங்கும் போது இந்த மீனை வாங்கி சாப்பிடுங்க..!

1

  • மீன் வகைகளிலே குறைவான கொழுப்பு சத்துள்ளது இந்த ஊளி மீன்கள்தான்.இந்த ஊளி மீன்கள் குடல் புண்கள், நுரையீரல் தொற்று ஆகியவற்றை அடியோடு விரட்டுகிறது. மூளை வளர்ச்சிக்கு இந்த ஊளி மீன்கள் அதிகம் உதவுகின்றன.
  • கொழுப்பு சத்து இந்த மீன்களில் குறைவாக இருப்பதுடன், ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலங்கள் இதயத்திற்கு மிகவும் நன்மை தருகிறது.
  • ஆண்களின் உயிரணுக்களின் எண்ணி்க்கையை அதிகரிப்பதில் ஊளி மீன்களுக்கு பெரும்பங்கு உள்ளது..
  • சர்க்கரை நோயாளிகள் இந்த ஊளி மீன்களை சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கும்.
  • ஊளி மீன்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் சம்பந்தமான எந்த பிரச்சனைகளும் வருவதில்லை
  • மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஊளி மீன்களில் கொழுப்பு குறைவாக உள்ளது. இதனால், இதயத்துக்கு மிகவும் நன்மையை தருகிறது. இதயத்தை பாதுகாக்கக்கூடிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த உணவுதான் இந்த மீன்.
  • ரத்தக் கட்டிகள் உருவாவதை தடுப்பதில் ஊளி மீன்கள் சிறப்பாக செயல்புரிகின்றன. இதனால் பக்கவாதம் அபாயம் குறைகிறது 
  • தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு ஊளி மீன்கள் அருமருந்தாகின்றன
  • அத்துடன் ஊளி மீன்களை மாதவிடாய் காலத்தில் பெண்கள் அதிகமாக உட்கொள்வது மிகவும் நன்மை தரக்கூடியது. 

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த மீன் பெஸ்ட் சாய்ஸ்.. இதிலுள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களுக்கு பேருதவி புரிகின்றன.. இந்த மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மனச்சோர்வு, பதட்டம் நீங்கும்.. பிற மனநல கோளாறுகளின் அபாயத்தையும் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.அதுமட்டுமல்ல, கண்களில் எந்த பிரச்சனையாக இருந்தாலும், இந்த ஊளியை சாப்பிட்டுவந்தால், அதுவும் சீராகும்.

எப்படி சாப்பிடலாம்: பொதுவாக, இந்த ஊளியை வறுவல் அல்லது குழம்பு செய்வார்கள்.. ஆனால், ஊளி மீனை சுத்தம் செய்து, உப்பு, மிளகு, ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து வேகவைத்து சாப்பிடுவார்கள்.. குறைவான மசாலா பொருட்களை மேரனேட் செய்து, கிரில் செய்து சாப்பிட்டால், முழு சுவையும் கிடைக்கும்.. அல்லது நெருப்பில் சுட்டும் சாப்பிடலாம்.. அல்லது சாலட் செய்தும் சாப்பிடலாம்.

ஊளி மீன் புட்டு: இந்த ஊளி மீனில் புட்டு செய்தால் இன்னும் ருசியாக இருக்கும். இதற்கு ஊளி மீன் துண்டுகளை கழுவி சத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சிறிது மஞ்சள் தூள், கல் உப்பு சேர்த்து, இந்த மீன் துண்டுகளையும் சேர்த்து வேக வைக்க வேண்டும். 3 நிமிடங்களில் மீன் வெந்ததும், அவைகளை வெளியே எடுத்து ஒரு தட்டில் ஆற வைத்து, உதிர்த்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு வாணலில் எண்ணெய், சோம்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கிளறி, அதனுடன் உதிர்த்து வைத்துள்ள மீன் துண்டுகளை கொட்டி கிளற வேண்டும்.. பிறகு, உப்புத்தூள், சீரகத்தூள், மிளகு தூள், துருவிய தேங்காய் சிறிது சேர்த்து 2 நிமிடம் வதக்கிவிட்டு, கொத்தமல்லி தூவி இறக்கினால், ஊளி மீன் புட்டு ரெடி. 

ஊளி ஃப்ரை: அதேபோல, குழந்தைகளுக்கு ஊளி மீனை ஃப்ரை செய்து தரலாம்.. இதற்கு ஒரு பாத்திரத்தில் கான்பிளவர் மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், சிறிது எள், முட்டை, உப்புத்தூள், சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். இப்போது சுத்தம் செய்து வைத்திருக்கும் ஊளி மீன்களை, இந்த மசாலாவில் ஊறவைத்து, பொரித்து தந்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Trending News

Latest News

You May Like