1. Home
  2. ஆரோக்கியம்

அத்திக்காய் இருக்க வாய்ப்புண்ணாவது வயிற்றுப்புண்ணாவது...

அத்திக்காய் இருக்க வாய்ப்புண்ணாவது வயிற்றுப்புண்ணாவது...

கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் என்று அத்திக்காய் குறித்த பழமொழி ஒன்று உண்டு. பாதுகாப்பான பக்க விளை வில்லாத சிறந்த மருத்துவ குணமுள்ள உணவாக அத்திக்காயை சொல்லலாம். நேரத்துக்கு உணவு எடுத்துக்கொள்ளாமல் அவ சரத்தில் கிடைத்ததை உண்டு சாப்பிட்டு செல்வோர்கள் தங்களையும் அறியாமல் அல்சருக்கு அடித்தளம் அமைக்கிறார்கள்.

குடல்களின் இயக்கம் சீரற்று வயிற்றில் புண்ணை உண்டாக்கினாலும் வாய்ப்புண் வந்தபிறகே நோயின் தீவிரத்தை உணர் கிறோம். அதனால் தான் நோய் வரும் முன்பே மருத்துவகுணமுள்ள உணவுகளையும் அவ்வபோது சேர்த்து வர வேண்டும் என்று கூறியதோடு அதைக் கடைப்பிடித்தும் வந்தார்கள் நம் முன்னோர்கள்.அவற்றில் ஒன்று இன்று மருத்துவர்களாலும் ஒப்புக் கொண்டு சிறந்த மருத்துவ உணவாக பரிந்துரைக்கப்படுவது அத்திக்காய்.

அத்தி மரப்பட்டை, வேர், அத்திக்காய், அத்திப்பழம், உலர் அத்திப்பழம் என எல்லாமே சிறந்த மருத்துவ குணங்களை உள்ளடக் கியுள்ளதை மருத்துவத்துறை ஒப்புகொண்டுள்ளது. மாதம் ஒருமுறை அத்திக்காயை வைத்து கூட்டு, பொரியல் வைத்து சாப் பிட்டால் வாய் வேகாளம், வாய் எரிச்சல், வாய்ப்புண்ணை நிரந்தரமாக குணமாக்குவதோடு வயிற்றுப்புண்ணையும் சரி செய் யும் வல்லமை அத்திக்காய்க்கு உண்டு.

அத்திக்காய் கூட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாமா?
அத்திக்காய் – 200 கிராம்
தேங்காய் –அரைமூடி
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா அரைத்தம்ளர்,
பொடியாக நறுக்கிய வெங்காயம்- 1 கப்,
தக்காளி – அரை கப்,
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
சீரகம்- 3 டீஸ்பூன்,
தாளிக்க தேவையான பொருள்கள்:
கடுகு- 1 டீஸ்பூன்,
வெந்தயம், உ.பருப்பு, சீரகம் – தலா 1 டீஸ்பூன்
வரமிளகாய் -3
உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை – தேவைக்கேற்ப.

செய்முறை:
அத்திக்காயைத் தண்ணீரில் வேகவைத்து இறக்கும் போது சிட்டிகை மஞ்சள்தூள், கல் உப்பு சேர்த்து நீரை வடித்து நசுக்கி கொள்ளவும். மிக்ஸியில்அரைக்க வேண்டாம். கீரை மசியலுக்கு பயன்படுத்தும் மத்து இருந்தால் கூட இலேசாக இடித்துக் கொள்ளலாம்.

குக்கரில் க.பருப்பு, து.பருப்பை சேர்த்து 2 விசில்விடவும். கூட்டுஎன்பதால்பாசிப்பருப்பு சேர்க்கலாம். ஆனால் துவர்ப்பான சுவை கொண்ட அத்திக்காய்க்கு க.பருப்பு, து.பருப்பு, சுவை கூட்டும். மிக்ஸியில் தேங்காயைத் துருவி, சீரகம் சேர்த்து அரைக்கவும். பிறகு குக்கரை இறக்கி இடித்த அத்திக்காய், மிக்ஸியில் அரைத்த தேங்காய் விழுது, நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது ம.தூள் சேர்த்து மீண்டும் 3 விசில் விட்டு இறக்கவும்.

தாளிப்பு சேர்த்து உப்பு கலந்து கறிவேப்பிலை தழையை தூவி இறக்கவும். மணக்க மணக்க அத்திக்கூட்டு தயார். சூடான சாதத்தோடு பிசைந்துசாப்பிட்டால் வாய்ப்புண்ணும் வயிற்றுப்புண்ணும்இருந்த இடம்தெரியாமல்ஓடிப்போகும்.இட்லி, தோசை, சப்பாத்திக்கும் ஏற்ற டிஷ் இது.

எல்லாம் சரி அத்திக்காயுக்கு எங்கே போவது என்கிறீர்களா? இப்போதுதான் எல்லா கீரைக்கடைகளிலும் எல்லாம் கிடைக்கி றதே. தேவையென்றால் சொல்லி வாங்கித்தர சொல்லலாம். முயற்சி செய்து பாருங்களேன்.மருத்துவரின் உதவியில்லாமல் வாய்ப்புண்ணை குணமாக்க சிறந்த மருத்துவம் இது என்கிறது சித்தமருத்தவமும்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like