1. Home
  2. ஆரோக்கியம்

ஃப்ரீசரில் பனி மலைப் போல் குவியும் ஐசை குறைக்க டிப்ஸ் !

ஃப்ரீசரில் பனி மலைப் போல் குவியும் ஐசை குறைக்க டிப்ஸ் !


இன்றைய வாழ்க்கையில் ஃப்ரிட்ஜ்ஜின் பங்கு முக்கிய இடத்தை வகிக்கிறது. காய்கறி, பால், மாவு தொடங்கி நேற்று மீதமிருந்த சாம்பார், சட்னி வரை அனைத்தையும் இல்லத்தரசிகள் ஸ்டோர் செய்து விடுவார்கள். ஆனால் ப்ரிட்ஜ் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்களின் குற்றச்சாட்டு அடிக்கடி ஃப்ரீசரில் அதிகளவு பனி மலைபோல் குவிந்து விடுவதே. 

ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரில் அதிகளவு குவிந்து விடுவதற்கு சில காரணங்கள் இருப்பதாகவும், சில பிரச்சனைகள் சரி செய்தால் இது தீரும் என்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.அடிப்படையான சில விஷயங்களே இதற்கு காரணம் என்றும் கூறுகின்றனர். ஃப்ரீசர் அல்லது ஃபிரிட்ஜின் கதவில் ஏதாவது குறைகள் இருந்தால் அதனால் திறக்கப்படும் போது உட்புகும் காற்று உள்ளே சென்று சுற்றிக் கொண்டிருக்க பனிக்கட்டிகள் குவியும். உடனடியாக ஃப்ரிட்ஜ் மற்றும் ஃப்ரீசரின் கதவை செக் செய்வது தான் ஒரே வழி.

அடுத்ததாக நீரை ஆவியாக்கும் காயில் சேதமடைந்தால் பனிக்கட்டிகள் உருவாகலாம். ஃபிரிட்ஜில் நீர் அதிகமாக தேங்குவதை இந்த காயிலால் மட்டுமே சரிசெய்ய இயலும். இந்தக் காயிலை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

தண்ணீரை சுத்திகரிக்கும் வாட்டர் ஃபில்டர் பழுதடைந்தாலும் ஐஸ்கட்டி உருவாகலாம். ஃபிரிட்ஜின் செயல்பாடு சரியாக இருக்க வருடத்திற்கு ஒருமுறையாவது அனைத்தையும் செக் செய்து கொள்வது அவசியம். அத்துடன் ஒருமுறை வைத்து வாராவாரம் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் ஃபிரிட்ஜை சுத்தம் செய்வதும் இந்தப் பிரச்சனையை சரிசெய்ய உதவும்.
 

newstm.in

Trending News

Latest News

You May Like