1. Home
  2. ஆரோக்கியம்

உணவின் மூலம் உடல் எடையைக் குறைக்க சில டிப்ஸ்..!

1

புரதச்சத்து அதிகம் உள்ள முட்டைகள் கொழுப்பை வேகமாக எரிக்கின்றன. இதில் உள்ள வைட்டமின் பி12, இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து, எட்டுவித தாது உப்புகள் இந்த பணியை செய்கின்றன.

புரதச்சத்து நிறைந்த மீன் அதிக கொழுப்பை எரிக்கின்றது. மீனில் உள்ள ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள், கொழுப்பை உருவாக்க பயன்படும் ரசாயனப் பொருட்களை தடுக்கின்றன.

காலை, மாலை இரண்டு வேளை கிரீன் டீ பருகினால் கொழுப்பு உட்கிரகிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

காலையில் ஓட்ஸ் கஞ்சி குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்பு குறைகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள ஓட்ஸ் நீண்ட நேரம் இரைப்பையில் தங்கி இருப்பதால், அதிக பசியை குறைப்பதுடன் கொலஸ்ட்ராலை தடுக்கிறது.

ஓட்ஸ் கஞ்சியில் தேன் சேர்த்து குடிப்பது மிகவும் நல்லது.

காலை,இரவு இரண்டு வேளையும் வெந்நீரில் எலுமிச்சை சாறு, தேனைக் கலந்து குடிப்பது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும்.

பாலில் நிறைய சுண்ணாம்பு சத்து உள்ளது. இது கொழுப்பை எரிப்பதற்கும், கொழுப்பு உருவாகாமல் தடுப்பதற்கும் மிகவும் தேவை.

முட்டைக்கோஸ், அவரைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, வெள்ளரிக்காய், வெங்காயம், பூண்டு போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

திராட்சைப்பழம், அன்னாசிப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி, சப்போட்டோ, மாதுளை போன்ற பழங்களில் ஒன்றோ இரண்டோ தினமும் சாப்பிட வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்தால் கொழுப்பை எளிதாக கரைக்கலாம். இவற்றோடு போதிய உடற்பயிற்சியும் சேரும் போது கொழுப்பு காணாமலே போய் விடும். 

Trending News

Latest News

You May Like