30 நிமிடத்தில் கடலை மாவை வைத்து செய்யக்கூடிய டிஃபன் ரெசிபி..!
வழக்கமான தோசையே சாப்பிடுவது அலுப்பாக இருக்கிறதா? இந்த விரைவான மற்றும் எளிதான கடலை தோசையை உங்கள் அடுத்த காலை உணவுக்கு தயார் செய்யலாமே! இந்த தோசைக்கு ரவை, உளுத்தம் பருப்பு, அரிசி எதுவும் தேவையில்லை. கடலை மாவுடன் சிறிது உப்பு, பெருங்காயம், மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கி 5 நிமிடம் ஊறவைத்து தோசை சுடலாம்.
மேலே சொன்ன அதே மாவு கலவையில் கொத்தமல்லி, கருவேப்பிலை, வெங்காயம் பொடியாக நறுக்கி போட்டு தோசை சுடலாம். கொஞ்சம் தண்ணீர் குறைத்து அடை போல தட்டியும் போடலாம், சாம்பார் அல்லது தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டு பாருங்க.. சுவை அள்ளும்.
முட்டை சாப்பிடாத மக்கள் சாப்பிடும் வெஜ் ஆம்லெட்டுக்கு கூடுதல் சேர்த்து சாப்பிட தக்காளி கடலைமாவு ஆம்லெட் முயற்சிக்கலாம். கடலை மாவில் வெங்காயம் , தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கி, அதோடு உப்பு சீரகத்தூள் சேர்த்து 15 நிமிடம் ஊறவிட்டு ஆம்லெட்டாக சாப்பிட்டு பாருங்க.
ரொட்டி, சப்பாத்தி என்றால் நம் எல்லோருக்கும் கோதுமை மாவில் செய்வது என்பது தான் தோனின்றும். ஆனால் கடலைமாவை வைத்தும் ருசியான ரொட்டி செய்யலாம். ஹரியானா பாணி பெசன் மசாலா ரொட்டி செய்ய கடலைமாவு, சிறிது கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், உப்பு சீரகத்தூள், சேர்த்து கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் ஊறவைத்து தேய்த்து, சுட்டு எடுத்தால் ரெடி.
லௌகி பெசன் சீலா என்பது வடஇந்தியாவில் பலருக்கு ஒரு சிறந்த காலை உணவாகும். இந்த சீலாவில் துருவிய சுரைக்காய், கடலை மாவு,மஞ்சள், பெருங்காயம், இஞ்சி பூண்டு விழுது, சீரகத் தூள் , சிவப்பு மிளகாய் தூள், வெள்ளை எள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலைகள், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கலக்கி தோசை போல வார்த்து சாப்பிட வேண்டியது தான்
வெஜி பெசன் டோஸ்ட் செய்ய, கடலை மாவில், உப்பு, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், மல்லி தூள், பெருங்காயத்தூள் , ஒரு சிட்டிகை பேக்கிங் பவுடர் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான மாவை உருவாக்கவும். இப்போது நீங்கள் விரும்பிய காய்கறிகளைச் சேர்க்கலாம். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் தடவவும். பிரெட் துண்டுகளை மாவில் தோய்த்து சூடான தவாவில் போட்டு மொறுமொறுப்பாகும் வரை வேகா வைத்து எடுத்தால் முடிந்தது.
.png)