1. Home
  2. ஆரோக்கியம்

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வாழைப்பழத்தை இப்படி செஞ்சு வெறும் வயித்துல குடிங்க...!

1

வாழைப்பழம் - 1,
ஆளி விதை - 1 ஸ்பூன்,
இஞ்சி - 1 இஞ்ச் அளவு,
பாதாம் பால் (அ) பசும்பால் - 1 கப்
அன்னாசி பழம் - 100 கிராம்

செய்முறை

வாழைப்பழத்தை நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

இஞ்சியை தோல் வீசி துருவி வைத்துக் கொள்ள வேண்டும். இதோடு பொடியாக நறுக்கிய அன்னாசி பழம், பால் ஆகியவற்றைச் சேர்த்து பிளண்டரில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இதை வடிகட்டாமல் குடிப்பது தான் நல்லது. இந்த ஸ்மூத்தியில் ஒரு சிட்டிகை லவங்கப்பட்டை பொடியைத் தூவிக் குடிக்க இன்னும் சிறந்த பலன்கள் கிடைக்கும்.

காலை உணவுக்கு பதிலாக இந்த ஸ்மூத்தியைக் குடிக்கலாம்.

நன்மைகள்

மேலே குறிப்பிடப்பட்ட வாழைப்பழ பானத்தை குடிக்கும்போது மிக எளிதாக ஜீரணமடையும்.இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவி செய்யும்.

இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்கிறது.

உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்து உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கலோரிகளைக் கரைத்து உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

பொட்டாசியம் நம்முடைய உடலுக்குத் தேவையான பொட்டாசியத்தைக் கொடுப்பதோடு தசைகளை வலிமையாக்க உதவி செய்யும். அதோடு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.

அத்தகைய பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழத்தை பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருள்களோடு சேர்த்து பானமாக எடுத்துக் கொள்ளும்போது நிறைய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

Trending News

Latest News

You May Like