1. Home
  2. ஆரோக்கியம்

ஹார்ட் அட்டாக் வரவே கூடாதுன்னு சொல்றவங்க இதை ஒண்ணு மட்டும் சாப்பிட்டா போதும்..!

1

தற்போதைய காலகட்டத்தில் வயதான பிறகு வரக்கூடிய நோயெல்லாம் இள வயதிலேயே வந்து விடுகிறது. அப்படி  காவு வாங்கும் நோய்களில் முக்கியமானது ஹார்ட் அட்டாக். இதயத்தை பத்திரமா வைத்துகொண்டால் எந்த பிரச்சனையும் வராது. அதற்கு உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டுமென்றால் இரத்த நாளங்களில் அடைப்பு இருக்க கூடாது. அப்படியென்றால் நாளங்களில் அடைப்பு இருக்க கூடாது. அடைப்பு உருவாக கூடாது என்றால் கொழுப்பு  கெட்ட கொழுப்பு படிய கூடாது... இப்படி வாலு போய் கத்தி வந்ததுங்கிற கதையா நீண்டுக்கிட்டே போகிற அளவுக்கு சொல்லிட்டே போகலாம். 

ஆனால் இதற்கு ஒரு தீர்வு உண்டு என்பது தெரியுமா? நம்சமையலறையில் இருக்கும் பூண்டு தான் அது. பூண்டின் வாசனையால் அதன் அருகில் செல்ல மாட்டோம். அதனால் தான் காரமிக்க மசாலா அரைக்கும் போது அதை பயன்படுத்துகிறோம். ஆனால் இதன் மருத்துவ குணங்களை அடுக்கி கொண்டே போகலாம். 

தினமும் 4 பல் பூண்டை நெருப்பில் தோலோடு  அவை கருப்பாக இருக்கும் வரை வைத்து சுடுங்கள். பிறகு தோல் நீக்கி சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் வெளியேறும் இதனால் இரத்த நாளங்களில் படிந்து கிடக்கும் கொழுப்புகள் வெளியேறும். இரத்த ஓட்டம் சீராக இருப்பதால் இதயத்துக்கு தடங்கலின்றி இரத்த ஓட்டம் கிடைக்கும். உடல் முழுக்க ஆக்ஸிஜன் தடையின்றி கிடைக்கும். இதயம் பத்திரமாக இருக்கும். வெறும் பூண்டு இதை செய்துவிடுமா.. நிச்சயமாக செய்யும் என்கிறது ஆய்வு. 

பச்சை பூண்டினுடைய ஊட்டச்சத்தை விட வறுத்ததில் நிறைய நன்மைகளும் ஊட்டச்சத்துக்களும் அதிகம்.வறுத்த பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், ஜலதோஷத்தில் இருந்து நம்மை காப்பாற்றவும் உதவுகிறது.

பூண்டு நம் அனைவரின் சமையல் அறையிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய உண்வு பொருட்களில் ஒன்றாகும். பூண்டு ஒரு உணவின் சுவையை மேம்படுத்துவதோடு, அதிலுள்ள ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களையும் நமக்கு வழங்குகிறது. இது பல ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது உங்கள் சமையலில் பூண்டு விழுதை சேர்த்து சாப்பிடலாம். இல்லையென்றால் நீங்கள் பூண்டை வறுத்து கூட சாப்பிடலாம். வறுத்த பூண்டு மிகவும் சுவையாகவும் இருக்கும்.

- பூண்டை வறுத்தெடுப்பது ஆரோக்கியமான குடலை ஒழுங்குபடுத்துவதன் மூலம் செரிமானத்தை எளிமை ஆக்குகிறது.

- இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. மேலும் பொதுவான சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கவும் உதவுகிறது.

- இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளது. மேலும் பூண்டு நச்சுகளை வெளியேற்றுவதற்கு பயன்படுகிறது. இதன் மூலம் பூண்டு இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.

அந்தரங்க வாழ்க்கையை இனிமையாக்கும். பாலியல் ஆர்வத்தை அதிகரிக்கும். பாலியல் ஹார்மோன்களை தூண்டும் ஆற்றல் இந்த பூண்டுக்கு உண்டு.

- வறுத்த பூண்டில் இருந்து ஒரு பேஸ்டை உருவாக்கி அதை வெண்ணெய் உடன் சேர்க்கவும். பின்பு இதை உங்களின் பூண்டு ரொட்டியின் (கார்லிக் பிரட்) மேல் பரவலாக தடவி சாப்பிடலாம்.

- வறுத்த பூண்டை சூப் முதல் கோழிக்கறி வரை பல வகையான சமையல் குறிப்புகளுக்கு ஒரு அழகுபடுத்தும் பொருளாக பயன்படுத்தப்படலாம்.

Trending News

Latest News

You May Like