இந்த ஒரு பொருள் போதும்... உடல் எடை குறைப்பு முதல் செக்ஸ் வரை..!
தாமரை விதைகளை தினசரி 2 அல்லது 4 முறை சாப்பிட்டால் ஒரு ஆணுக்கு குதிரைக்கு நிகரான பலம் கிடைக்குமாம். தாமரை விதைகளை நேரடியாகவும் சாப்பிடலாம் அல்லது வறுத்து, இனிப்பு சேர்த்தும் சாப்பிடலாம்.
100 கிராம் தாமரை விதைகளில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு ஆகியவை உள்ளன; மீதமுள்ளவை தண்ணீர் மற்றும் தாதுக்கள். முக்கியமாகச் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. இதில் நார்ச்சத்தும் வைட்டமின்களும் குறைவாகவே உள்ளன.
நீண்ட, நாள்பட்ட வயிற்றுப்போக்கைத் தடுக்க உதவுகிறது. எனவே, மலச்சிக்கலால் பாதிக்கப்படுபவர்கள் இதை உட்கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும்.
நமது உடலில் குறைந்தளவு மக்னீசியம் இருந்தால் மாரடைப்பு வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. தாமரை விதைகளில் அதிகளவு மக்னீசியம் உள்ளதால் ரத்த ஓட்டமும் ஆக்சிஜன் சப்ளையும் மேம்படுகிறது. இதய நோய் ஆபத்துகளும் குறைகின்றன.
கால்சியம் சத்து நிறைந்தது:
பொதுவாக நமக்கு கால்சியம் சத்து கிடைக்க நாம் பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றை எடுத்துக் கொள்கிறோம். அதற்கு ஈடான கால்சியம் சத்து தாமரை விதைகளிலும் கிடைக்கிறது. இந்த கால்சியம் சத்துதான் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆகவே, மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இதை சாப்பிட்டு பலன் அடையலாம்.
தூக்கத்தை மேம்படுத்தும்:
அளவுக்கு அதிகமான ஸ்ட்ரெஸ் காரணமாக தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டு இன்றைக்கு பலரும் அவதி
தாதுக்கள் கொண்டது:
தாமரை விதைகளில் மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைவாக கிடைக்கின்றன. இதை சாப்பிடும் ஆண்களுக்கு பாலுணர்வு மேலோங்கும் மற்றும் அதிக சக்தியுடன் செயல்படுவார்கள். தாமரை விதைகளில் பி காம்ப்ளக்ஸ், விட்டமின் கே போன்ற சத்துக்களும் உள்ளன.
தசைகள் வலுப்படும்:
தசைப்பிடிப்பு அல்லது தசைவலி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் தாமரை விதைகளை சாப்பிடலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு தாமரை விதைகளை கொடுத்தால் அவர்களுடைய தசைகள் வேகமாக வளர்ச்சி அடையும்.
ரத்த சர்க்கரை கட்டுப்படும்:
சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள், நார்ச்சத்து மிகுந்த தாமரை விதைகளை எடுத்துக் கொள்ளலாம். இதில் ஆன்டிஆக்ஸிடென்ட் சத்துக்கள், சர்க்கரை நோயால் ஏற்பட்ட விளைவுகளை கட்டுப்படுத்தும்.
உடல் எடை குறையும்:
உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் தாமரை விதைகளை எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் இதில் கலோரிகள் மிகக் குறைவு. அதே சமயம், நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைத்துவிடும்.
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்:
பலருக்கு இன்று அதிகரித்துள்ள பிரச்சினை இந்த சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள். இவற்றால் பலர் நிம்மதியான வாழ்வை இழந்து கொண்டிருக்கின்றனர். தாமரை விதைகள் சிறுநீர் பாதையில் உள்ள நோய் கிருமிகளை அழித்து, நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். ஏனெனில் இவற்றின் நொதியில் இதனை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது.
பசியின்மை:
தாமரை விதைகளில் உள்ள astringent என்ற மூல பொருள், பசியின்மையை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது. சரியான வேளையில் உணவை எடுத்து கொள்ள அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இது ஒரு நல்ல மருந்தாக அமையும். அத்துடன் நாள்பட்ட வயிற்றுப்போக்கும் குணமடையும்.
இதய ஆரோக்கியம்:
அதிகமான கொழுப்புகள் உடலில் சேர்வதால் இது ரத்தத்தின் செயல்பாட்டை குறைக்கிறது. இதனால் இதயம் சார்ந்த கோளாறுகள் பெரிதும் ஏற்படுகிறது. தாமரை விதைகள் இதற்கு சிறந்த தீர்வாக உள்ளது. வறுத்த தாமரை விதைகளை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பக்கவிளைவுகள் உண்டா..? தாமரை விதைகளை சாப்பிடுவதால் பெரிய அளவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான பக்கவிளைவுகள் எதுவும் இல்லை. ஆனால், உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதுகுறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.