1. Home
  2. ஆரோக்கியம்

சர்க்கரை நோய் வராமல் இருக்க பெண்களுக்கு இந்தச் சத்து அவசியம்!

சர்க்கரை நோய் வராமல் இருக்க பெண்களுக்கு இந்தச் சத்து அவசியம்!

விட்டமின் டி சத்து அதிகமுள்ள பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

உலக அளவில் சர்க்கரை நோய் இன்று பெரும் பிரச்னையாக உள்ளது. இளம் வயதினர், நடுத்தர வயத்தினர், முதியோர் என அனைத்துத் தரப்பினரையும் இந்நோய் வாட்டி வதைத்து வருகிறது.

ஒருமுறை வந்தால் திரும்பப் போகாத கொடிய நோயான சர்க்கரை நோயிலிருந்து தற்காத்து கொள்ள உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை மருத்துவர்கள் அறிவுறுத்தி கொண்டுதான் உள்ளனர்.

இவற்றின் வரிசையில், விட்டமின் டி சத்து உள்ள உணவுப்பொருள்களை அதிகம் உட்கொள்ளும் பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று சர்வதேச ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

விட்டமின் டி சத்து, இன்சுலின் சுரப்பதை அதிகப்படுத்துவதன் மூலம், ரத்தசர்க்கரை அளவை(குளுக்கோஸ்) கட்டுக்குள் வைத்திருப்பது இந்த முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

நார்த் அமெரிக்கன் மெனோபாஸ் சொசைட்டி 35 முதல் 74 வயதுக்குள்பட்ட 680 பெண்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது.

உடல் எலும்புகளின் வளர்ச்சிக்கு அவசிய தேவையாக கருதப்படும் விட்டமின் டி, சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்தும் என்பது பெண்களுக்கு இனிப்பான செய்திதான்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like