ஆயுளை அதிகரிக்கச் செய்யும் உணவு இது தான்!! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

ஆயுளை அதிகரிக்கச் செய்யும் உணவு இது தான்!! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

ஆயுளை அதிகரிக்கச் செய்யும் உணவு இது தான்!! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
X

இன்று (ஏப்ரல் 7) உலக ஆரோக்கிய தினம். இன்று முதல் ஆரோக்கிய உணவு பழக்கத்தை  மேற்கொள்வோம்  என்கிற உறுதியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் நம்மை மட்டுமல்ல நமக்கு அடுத்து வருகிற தலைமுறையினரையும் பாதிக்கும்.  உயிர் கொல்லி என்பதை உணர்ந்து உணவு மாற்றத்தை கொண்டு வர முயற்சி செய்வோம். இன்று உலகம் முழுவதும் தலைவிரித்து மனித உயிர்களை காவு வாங்கி வரும் கொரோனா, சீனர்களின் தவறான உணவு பழக்கத்தினால் உருவானது என்று விவாதித்து வருகிறார்கள்.

மனிதர்களின் ஆயுளை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகள் என்று நடைப்பெற்ற சமீபத்திய ஆய்வின் படி, 100 இயற்கை உணவுகள் வயிற்றை முழுமையடைய செய்யும் என அறிவுறுத்தியுள்ளனர். முக்கியமாக கருதப்படுவது கொட்டை வகையை சார்ந்த வால்நட்ஸ்.

உங்கள் நாக்கிற்கு மட்டும் சுவை தரும் அநேக உணவுகள்  ஆரோக்கிய மற்றவையாக இருக்கக்கூடும். எனவே உடலுக்கு நன்மை  பயக்கும் சுவையுடைய  நார்ச்சத்து, கனிமங்கள் மற்றும் வைட்டமீன்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ள வால்நட் போன்ற உணவுவகைகளை தினசரி உணவு பட்டியலில் சேர்ப்பது உடல் நலத்தை பாதுகாப்பதுடன், வயிறு நிறைந்த திருப்தியையும் கொடுக்கிறது.

நமது நாளை முழுமையடைய செய்யக்கூடிய சக்தி இயற்கை சார்ந்த உணவு பொருள்களான காய், கீரை, பழங்கள், வால்நட் போன்றவைகளை  தினமும் எடுத்துகொள்வதான் மூலம் உடல் சார்ந்த பிரச்னைகளை பெரும்பாலும் தவிர்க்கலாம் என்கின்றனர் ஆராய்சியாளர்கள்.

வால்நட் பால்  போன்றவை குடல் நுண்ணுயிர்களில்  நேர்மறையான மாற்றங்களுக்கு உதவுகின்றன.  இதன்  மூலம் உங்கள் குடலின் ஆரோக்கியம்  மேம்படுகிறது. 

வால்நட் கொண்டு தயாரிக்கப்படும் மாவில்,  நார்ச்சத்து, மக்னீசியம், புரதம் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் ஒமேகா-3  கொழுப்பு அமிலங்கள் ஆகியவை அதிகளவில் இருப்பதுடன், உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கிய ஊட்டச்சத்தாக இது கருதப்படுகிறது. 

newstm.in

Tags:
Next Story
Share it