1. Home
  2. ஆரோக்கியம்

கரும்பு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது சொல்லுவார்கள்... ஏன் தெரியுமா ?

1

பொங்கல் பண்டிகையில் பெரும்பாலும் அனைவரும் விரும்பி உண்ணுவது கரும்பு. கரும்பில் எக்கச்சக்க நன்மைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும்.இதில் கால்சியம் பொட்டாசியம் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

அதே நேரத்தில் கரும்பு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க வேண்டாம் என நம் வீட்டில் சொல்வதை கேட்டு இருப்போம். ஏன் அப்படி சொல்கிறார்கள் தெரியுமா ? பெரியவர்கள், கரும்பு தின்னும் குழந்தைகளிடம், 'எலெ, தண்ணீய குடிச்சுடாதே..வாய் வெந்துடும்' என்று தொடர்ந்து எச்சரிக்கை செய்துக் கொண்டே இருப்பார்கள். ஏன் தெரியுமா ?

கரும்பை கடித்து சுவைத்து முடித்த பிறகு மெலிதாக தாகம் எடுக்கும். உடனே தண்ணீரை மொண்டு மடக்மடக் ஏன்று குடித்து விடாதீர்கள்.அப்படி செய்தால், வாய் வெந்து விடும். கரும்பு சாப்பிட்டு முடித்து 30 நிமிடங்கள் கழிந்தப் பிறகே தண்ணீர் அருந்த வேண்டும். ஏன் தண்ணீர் குடித்தால் வாய் வேகிறது.

கரும்பில் சுண்ணாம்பு சத்து(calcium) மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்நிலையில் கரும்பு சாப்பிட்ட உடனே நீங்கள் தண்ணீர் குடிக்கும் போது, கரும்புகளில் உள்ள தாதுக்கள், தண்ணீருடன் இணைந்து சூடான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் வயிற்று வலி, உப்புசம், வயிற்று புண், வாய்ப்புண் மற்றும் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, கரும்பைச் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்க வேண்டாம். கரும்பைச் சாப்பிட்ட உடன் நமக்கு மெல்லிய தாகம் போன்ற ஒரு உணர்வு எடுக்கத்தான் செய்யும். ஆனாலும், தண்ணீர் குடிக்காமல் கொஞ்ச நேரம் இருந்து விடுங்கள். இல்லையென்றால் வாய் வெந்துவிடும்.
 

Trending News

Latest News

You May Like