1. Home
  2. ஆரோக்கியம்

புரதச்சத்து நிறைந்த மீன்களில் இந்த மீன்கள் தான் டாப்..!

1

நம்முடைய உடலுக்கு நன்மை தரக்கூடியது என்றாலும், ஆரோக்கியத்தினை பாதுகாக்கும் மூலக்கூறுகள் அதிகம் உள்ளது மீன் தான். 

நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தக் கூடியது. இந்த புரத உணவுகள் தான். மற்றும் அசைவ உணவுகளை போல இல்லாமல் தினமும்கூட மீன் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். புரதச் சத்துக்கள் நிறைந்த சில மீன் வகைகளையும் அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களையும் பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

புரதச்சத்து நிறைந்த மீன் வகைகளில் இந்த சூரை மீன் மிக முக்கியமானது. இதில் அதிக அளவில் புரதச்சத்து நமக்கு கிடைக்கிறது. வெறும் 100 கிராம் சூரை மீனில் இருந்து மட்டும் நம்மால் 30 கிராம் அளவுக்கு புரதச்சத்தை பெற முடியும். இது கிட்டத்தட்ட நம்முடைய அன்றாட புரத தேவையில் 10%. அதனால் அடிக்கடி இந்த சூரை மீனை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மீன் முட்டையைச் சாப்பிடலாம் என்பதே நிறைய பேருக்குத் தெரியாது. மீன் முட்டையை பெரும்பாலானவர்கள் பார்த்திருக்கவே மாட்டார்கள். பெரிய மீன்களில் இந்த மீன் முட்டை இருப்பதை நம்மால் பார்க்க முடியும்.இந்த மீன் முட்டையில் மீன்களில் இருக்கும் அதே அளவுக்கு புரதச்சத்து நமக்கு கிடைக்கும். வழக்கமாக நாம் சாப்பிடும் முட்டை எப்படி புரதங்களின் மூலமாக இருக்கிறதோ அதேபோல மீனின் முட்டையும் மிகச் சிறந்த புரத மூலம். மீனில் இருப்பதற்கு நிகராக மீன் முட்டையிலும் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. 100 கிராம் மீன் முட்டையில் கிட்டத்தட்ட 28.5 கிராம் அளவுக்கு புரதச்சத்து கிடைக்கிறது

மற்ற எல்லா மீன்களையும்விட, இந்த நெத்திலி மீனின் உடல் மிக மெல்லியதாக காணப்படும்.. இந்த மீனின் மேல் பகுதியில் பச்சைக்கோடும், கீழ்பகுதியில் ரத்த சிவப்புக்கோடும் இருக்கும். நெத்திலி மீன்கள் மருத்துவக் குணங்கள் அதிகமுள்ளவை.பெரிய மீன்களை காட்டிலும், நெத்திலி போன்ற சிறிய மீன்கள் இதயத்துக்கு நல்லது என்பார்கள்.. அத்துடன், தைராய்டு சுரப்பி, நோய் எதிர்ப்பு சக்தி, எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு என பல்வேறு வகைகளில் இந்த நெத்திலி பயன்படுகிறது.. காரணம், செலினியம் இந்த மீனில் அதிகம் நிறைந்துள்ளது.இந்த நெத்திலி மீன் மிக சிறிய அளவில் கொழுப்புச் சத்து எதுவும் இல்லாதது போல் இருந்தாலும் இவற்றில் முழுக்க முழுக்க புரதச்சத்து நிறைந்திருக்கிறது.வெறும் 100 கிராம் நெத்திலி மீனில் இருந்து மட்டுமே நம்மால் 26 முதல் 28 கிராம் வரையில் புரதத்தை பெற முடியும். ஆனால் இந்த நெற்றியை நம் சமைக்கும் முன் மிக கவனமாக சுத்தம் செய்ய வேண்டும்.சிறிய மீன்கள் நேருக்குள் நீந்தும் போது மண்களையும் சேர்த்து விழுங்கும். அதனால் ஒரு அரை மணி நேரம் நெத்திலி மீன்களை பாலில் ஊறவைத்த பிறகு சுத்தம் செய்து சமைக்க வேண்டும்.

லாப்ஸ்டர் வகை மீன்களை நம் பொதுவாக அதிகமாக சாப்பிடுவதில்லை. ஆனால் சண்டை போல ஓட்டின் உள்பகுதியில் இருக்கும் சதைப்பற்று முழுமையும் புரதச்சத்தும் ஆரோக்கியமான கொழுப்புச் சட்டம் கொண்டது.குறைந்தபட்சம் மாதத்தில் ஒரு நாளாவது லாப்ஸ்டர் உணவுகளை எடுத்துக் கொள்வது மிக நல்லது.லாப்ஸ்டரில் கொழுப்பு சத்துக்கள் இருந்தாலும் அவை நம்முடைய உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் தான். ஒரு 100 கிராம் லாப் ஸ்டீரில் இருந்து மட்டும் நம்மால் 26.4 கிராம் அளவிற்கு புரதச்சத்தை பெற முடியும்

கடல் மீன்களில் மிக வலிமையாக தன்னை வைத்திருக்கும் மீன்களில் ஒன்றை இந்த வாலை மீன். வஞ்சிரம் மீனைப் போலவே இருக்கும் இந்த வாலை மீண்டும் சுவையில் வெண்ணெய் போல இருக்கும்.சதைப்பற்று அதிகம் கொண்ட இந்த மீனில் புரதச்சத்து நிறையவே இருக்கிறது. ஒரு 100 கிராம் வாலை மீனில் இருந்து மட்டும் உங்களால் 23 கிராம் அளவிற்கு புரதச்சத்தை எடுத்துக் கொள்ள முடியும். 

கடல் மீன்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்த உணவு என்றால் அது இறால்தான்.மிக மிக மென்மையாக முட்கள் இல்லாமல் இருப்பதால் இது எல்லோருக்கும் ஃபேவரட் இறாலில் புரதச்சத்து மிக அதிகம். அதேபோல ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொழுப்புச்சத்து ஆகியவை நிறைந்ததும் கூட.கறிமினை போலவே இறாலிலும் 100 கிராம் இறாலில் இருந்து கிட்டத்தட்ட 20 கிராம் புரதச்சத்து நமக்கு கிடைக்கும். அதேசமயம் உயர் கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இறாலில் அதிக அளவில் கொழுப்பு சத்து இருப்பதால் மற்றவர்களைவிட கொஞ்சம் குறைவாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது வாரத்தில் இரண்டு நாள் ஒரு நாள் மட்டும் எடுத்துக் கொள்வது.

தட்டை மீன் ஆங்கிலத்தில் பாம்ப்ரெட் என்று அழைக்கப்படும். இந்த மீன் மிக மிக சுவையானது.இதில் சாம்பல், வெள்ளை, நீலம் ஆகிய நிறங்கள் இருக்கின்றன. இந்த தட்டை மீனிலும் முட்கள் மிகக் குறைவு. ஆனால் சுவை அலாதியாக இருக்கும்.புரதச் சத்துக்கள் நிறைந்த மீன் வகைகளில் இதுவும் ஒன்று 100 கிராம் டைம் எனில் இருந்த நமக்கு கிட்டதட்ட 19.8 எட்டு கிராம் அளவிற்கு புரதச்சத்து கிடைக்கிறது

பண்ணா மீன் என்பது நம்முடைய இறைச்சி துண்டுகளைப் போலவே சதைப்பற்று நிறைந்ததாக இருக்கும். கிட்டத்தட்ட சால்மன் மீன் வகைகளுக்கு நிகரான சுவையும் அதேபோல சதைப்பற்றும் அதிகம் இருப்பதாகவும் இருக்கும்.இதில் கொழுப்புச்சத்து மிக மிகக் குறைவு. ஆனால் புரதச்சத்து மிக அதிகம் 100 கிராம் அளவிற்கு பண்ணா மீனில் இருந்து நமக்கு 18.4 கிராம் அளவிற்கு புரத சத்து கிடைக்கும்.

புரதச்சத்து நிறைந்த மீன்களில் நாம் கடைசியாகப் பார்க்க போவது கொடுவா மீன் பற்றி தான். இந்த கொடுவா மீன் பெரிதாக நாம் வாங்கி சாப்பிடுவதில்லை. ஆனால் கடலோரப் பகுதிகளில் இருக்கும் மக்களின் அதிக விருப்பமான மீன்களில் இந்த கொடுவா.

மேலும் ஒன்று மிக மிக சுவையான இந்த மீனில் கொழுப்புச்சத்து மிக மிக குறைவு ஆனால் புரதச்சத்து மிக அதிகம்.100 கிராம் கொடுவா மீனிலிருந்து 17.6 கிராம் அளவிற்கு உங்களுக்கு புரதச்சத்து கிடைக்கும். இனியாவது கொடுவா மீனை பார்த்தால் ஓரங்கட்டாமல் சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

Trending News

Latest News

You May Like