வாந்தி எடுப்பதை தவிர்க்க நம் வீட்டில் உள்ள பொருட்களே போதும்..!
நாம் உண்ணும் எல்லா உணவுகளிலும் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் தற்போது எதிர்பார்க்க முடிவதில்லை. நம்கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றும் நுண் கிருமிகளால் இந்த ஒவ்வாமை தூண்டப்படுகிறது. இதன் மூலம் வயிற்றில் ஒரு வித கலக்கமும், வாந்தியும் ஏற்படுகிறது.
பலநேரங்களில் நம்மால் வாந்தியை கட்டுப்படுத்த முடியாது. நம் உடலுக்கு தேவையில்லாத ஒன்றை நாம் உட்கொள்ளும் போது உடலிலுள்ள தடுப்பு அமைப்புகள் அவற்றை வாந்தியின் மூலமாக வெளியேற்றுகிறது.
வாந்தி ஒரு பெரிய தொற்றுநோய்க்கான அறிகுறியாகும். உணவில் உள்ள நோய்க்கிருமிகள் எளிதில் கொல்லப்பட முடியாது. அந்த நோய்க்கிருமிகள் வாந்தியைத் தூண்டுகிறது.
குமட்டல் மற்றும் வாந்தி இவற்றின் வித்தியாசத்தை நாம் உணர வேண்டும். குமட்டல் என்பது வாந்தியின் போது உடலுக்கு ஏற்படும் ஒரு மந்த நிலை. குமட்டல் இருந்தால் வாந்தி கட்டாயம் எடுக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. மலச்சிக்கல் மற்றும் மன அழுத்தம் இருக்கும்போது கூட குமட்டல் ஏற்படலாம். நீண்ட தூர பிரயாணங்களில் சிலருக்கு குமட்டல் ஏற்படும்.
உணவு சுவையாக இருக்கும்போது நமக்கே தெரியாமல் அதிக அளவு உணவை நாம் எடுத்துக் கொள்வோம். செரிமான அளவிற்கு அதிகமாக உண்ணும்போது செரிமான மண்டலம் வாந்தியை ஏற்படுத்தும் . உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பானங்கள் ,மது போன்றவற்றை நாம் பருகும் போதும் வாந்தி ஏற்படும்.
புலிமியா மற்றும் அனோரெக்ஸியா போன்ற உணவு சீர்குலைவுகளால் பாதிக்கப்பட்ட பலர் உள்ளனர். இந்த நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஒரு குறிப்பிட்ட உடல் தோற்றத்தை அடைவதற்காக உணவு உட்கொண்டதை கட்டாயமாக வாந்தி எடுக்கலாம். மேலே கூறப்பட்ட காரணங்கள் தவிர, வாந்தியலுக்கு வழிவகுக்கும் அடிப்படை காரணங்கள் உள்ளன. இதில் குடல் அழற்சி, ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலி அல்லது கட்டிகள் அடங்கும்.
வாந்தி எடுப்பதை தவிர்க்க நம் வீட்டில் உள்ள பொருட்களே போதும் .
வாந்தியை தடுக்கும் சிகிச்சைகளை பற்றி இப்போது காண்போம்.
1. #இஞ்சி:
ஒரு சிறிய துண்டு இஞ்சியை நசுக்கி தண்ணீரில் போட வேண்டும். அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து நாள் முழுதும் இந்த நீரை அருந்த வேண்டும். இஞ்சி வயிற்றின் எரிச்சலை போக்கி உடனடி நிவாரணம் கொடுக்கும்.
2. #கிராம்பு:
ஒரு கிராம்பு துண்டை வாயில்போட்டு நன்றாக சப்ப வேண்டும். கிராம்பின் வாசனையும் சுவையும் உடனடியாக வாந்தியை கட்டுப்படுத்தும். நாவின் சுவைமொட்டுகளில் ஒரு மாற்றத்தை உண்டாக்கும்.
3. #சர்க்கரை-#உப்புநீர்_கலவை:
வாந்தியெடுத்தல் உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம், முதலிய பல்வேறு அளவு உப்புகளின் ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும் திறனைக் கொண்டிருப்பதால் சர்க்கரை மற்றும் உப்பு நீரின் கலவையை குடிப்பதன் மூலம் உடலை திறமையான செயல்பாட்டு வரம்புக்கு ஏற்றவாறு சமன் செய்யலாம்.
இந்த பானம் உடல் நீர் வறட்சி அடையாதவாறு பாதுகாத்து சோர்வடையாமல் காக்கிறது . இது ஒரு இயற்கையான எலக்ட்ரோலாக செயல்படுகிறது.
4. #எலுமிச்சை_சாறு:
ஒரு டம்பளர் தண்ணீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து பருகலாம். தேவைபட்டால் சிறிது தேனை சேர்த்து கொள்ளலாம். எலுமிச்சையில் உள்ள வைட்டமின்களும் மினரல்களும் உடனடியாக வாந்தியை தடுத்து நிறுத்துகின்றன.
5. #சோம்பு:
ஒரு சிறிய இடைவெளியில் சோம்பை சிறிது சிறிதாக சுவைக்கும்போது வாந்தி கட்டுப்படும்.இது வாயின் சுவையை புதுப்பித்து புத்துணர்ச்சியை கொடுக்கும் .
6. #ஆரஞ்சு_பழச்சாறு:
உடல் இழந்த வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துகளை ஆரஞ்சு பழச்சாறு வேகமாக மீட்டு கொடுக்கும். இரத்த அழுத்தத்தை சீராக்கும் தெம்பை உடலுக்கு இது திரும்ப பெற்று தருகிறது.
வாந்தியெடுத்து களைப்படைந்த உடலுக்கு தேவையான ஓய்வு கொடுக்க பட வேண்டும்.குப்புற படுக்காமல் நேராக படுக்க வேண்டும்.
நீண்ட நேர ஓய்வு நல்ல பலனை கொடுக்கும். உடல் மிகவும் பலவீனப்படுவதால் தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பட வேண்டும்.
உடலுக்கு தேவையில்லாத கழிவுகளை உடல் வெளியேற்றுவதால் வாந்தியை கட்டுப்படுத்துவதும் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும்.