நாலே நாளில் முடி உதிர்தலை தடுக்க சிம்பிளான வழி..!!
முடி வளர்க்க யாரும் ஆசைப்படுவதில்லை. ஆனால் இருக்கும் சிறிதளவு முடியேனும் அடர்த்தியாக இருக்க வேண்டும் என ஆசைப்படாத பெண்கள் இல்லை.
ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் முடி கொத்து கொதாக உதிர்வதைப் பார்க்கும் போது பெண்கள் மிகுந்த மன அழுத்ததிற்கு ஆளாகின்றனர். இதை கட்டுப்படுத்த பார்லர், ஹேர் கிளினிக் செல்ல தேவையில்லை. வீட்டிலிருந்தே படியே சில எளிய நடைமுறைகளை பின்பற்றினாலே போதுமானது.
தலையில் முடி ஆரம்பிக்கும் வேரில் அழுத்தமாக தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தாலே முடி உதிர்தல் பிரச்சனையை பெருமளவு குறைக்கலாம். இது வேரிலிருந்து முடிக்கு ஊட்டமளிக்க உதவுகிறது.
தயிரை தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவைத்து வெதுவெதுப்பான தண்ணீரில் அலசி விட முடி உதிர்தல் கட்டுக்குள் வரும். முட்டையின் மஞ்சள் கருவுடன் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கி அதை தலை முடியில் தேய்த்து அரை மணி ஊற வைத்து குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசி விட முடி அடர்த்தியாகும்.
கற்றாழையின் ஜெல்லை தலைமுடியில் தேய்க்க முடி உதிர்தலைத் தடுத்து அடர்த்தியான கூந்தல் வளர உதவுகிறது.