சுகப்பிரசவம் அருளும் நார்த்தம் பழம்!
நார்த்தம் பழச்சாறு எடுத்து தண்ணீர் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை என இருவேளைகள் அருந்தி வந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறுவதோடு , கர்ப்ப காலங்களில் ஏற்படும் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கத்தையும் குறைக்கும்.

எலுமிச்சை வகையை சேர்ந்து நார்த்தங்காய், இதனை ஊறுகாயாகவே பார்த்திருப்போம் ,ஆனால் இதன் நன்மைகள் என்ன என்னவென்று நமக்கு தெரியுமா? கிராமப்புறங்களில் பல வீடுகளில் மா, வேப்பிலை, தென்னை போலவே நார்த்தை மரமும் வளர்க்கப்பட்டு வந்தது. இதன் இலை, காய், பழம் என அனைத்திலும் ஆரோக்கியம் கொட்டிக் கிடக்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் அருளும் தன்மையும் இதற்கு உண்டு.
நார்த்தம் பழச்சாறு எடுத்து தண்ணீர் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை என இரு வேளைகள் அருந்தி வந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறுவதோடு , கர்ப்ப காலங்களில் ஏற்படும் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கத்தையும் குறைக்கும்.
மஞ்சள் காமாலையில் இருந்து மீண்டவர்களும், கல்லீரல் கோளாறு உள்ளவர்களும் தினமும் 2 வேளைகள் நார்த்தங்காய் சாறு குடிப்பதன் மூலம் நல்ல பலனை அடையலாம்.
வெயில் காலங்களில் ஏற்படும் உடல் சூடு தணிய, தினமும் ஒரு நார்த்தம்பழத்தை சாப்பிட்டு வந்தால் போதும். மேலும் இந்த பழத்தின் சாற்றை மதிய வேளையில் அருந்தி வந்தால் வெயிலின் தாக்கம் குறைவதோடு, புத்துணர்வும் கிடைக்கும்.
நார்த்தையின் தோல் அதிக மணம் கொண்டது. இந்தத் தோலை கொசுக்கள் அதிகம் உள்ள இடங்களில் வைக்கும்போது, கொசுக்கள் முதல் சின்னச் சின்ன பூச்சிகள் வரை தலை தெறிக்க ஓடிவிடும்.
வயிற்றில் ஏற்பட்ட புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது.
நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபடுவதுடன் ,உடல் எடையையும் குறைக்கலாம்.
பித்த அதிகரிப்பால் ஏற்படும் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை குணமாக, நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.
நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும்.
இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும்.
நார்த்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்துவர ரத்தம் சுத்தமடையும். வாதம், வயிற்றுப்புண், வயிற்றுப்புழு நீங்கும். பசியைத் தூண்டி செரிமானத்தை சீராக்கும் தன்மைக் கொண்டது.
நார்த்தங்காயின் மேல் தோலை தேன் அல்லது சர்க்கரைப்பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதபேதி உடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன் தரும்.
நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபடலாம். வயிற்று உப்புசமும் குறையும்.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் நார்த்தங்காய் சாறு கலந்து குடித்தால் குணமடைவார்கள்.
காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் நார்த்தைசாறு கலந்து குடித்தால் சருமம் மாசு மருவின்றி மாறும். இதன் சாற்றை தலையில் தடவிக் குளிப்பதன் மூலம் பொடுகையும் அதிகப்படியான எண்ணெய் பிசுக்கையும் போக்கலாம்.
திடீரென வருகிற தலைவலிக்கு நார்த்தை சாறு கலந்த தண்ணீர் உடனடி நிவாரணம் தருகிறது. அதில் சில துளிகள் நார்த்தை சாறு கலந்து குடிக்கலாம்.
நார்த்தை சாற்றில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகமுள்ளதால் புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் சக்தியும் இதற்கு உண்டு.
newstm.in