1. Home
  2. ஆரோக்கியம்

உயிருக்கு உலை வைக்கும் மைதா...

உயிருக்கு உலை வைக்கும் மைதா...

உயிருக்கே உலைவைத்து கேடுதரும் உணவு பொருள்களைத்தான் பரவலாக சப்புக்கொட்டி சாப்பிடுகிறோம். அவற்றில் ஒன்று எல்லோருக்கும் பிடித்தமான பரோட்டா. ஆரோக்யமான உணவுக்கு பதில் அரைவேக்காடான அழகான லேயரில் பொய் ஆரோக்யம் காட்டும் பரோட்டா மீது மனதை பறிகொடுத்ததன் விளைவு இன்று பரோட்டாவின் சுவையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மயங்கி இருக்கிறார்கள்.

மைதா உணவுகள்:
வீதிக்கு நான்கு தள்ளுவண்டிகடைகள், உணவகங்கள் என்று திரும்பும் இடமெல்லாம் அடுக்கடுக்கான லேயரில் பரோட்டாக்கள் பக்குவமாய் போட்டு எடுக்கிறார்கள். விருதுநகர் பரோட்டா, வீச்சு பரோட்டா, ஸ்பெஷல் பரோட்டா,கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா என்று விதவிதமான பெயர்களில் விதவிதமான சுவைகள் சேர்த்து தயாரிக்கப்படும் பரோட்டாக்களுக்கு ரசிகர்கள் அதிகம். பரோட்டா தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருளான மைதாவின் தயாரிப்பு பரோட்டாவைப் போல ருசியானதல்ல.

பீட்சா, பர்கர். பூரி, பாஸ்தா, நாண், பிஸ்கட், கேக், சமோசா,கச்சோரி, ருமாலி ரொட்டி,சாட் வகைகள் என்று உபரி பொருள்களும் மைதாவால் தயாரிக்கப்பட்டு சக்கை போடு போடுகிறது. வீட்டில் தயாரிக்கும் கோதுமை ரொட்டிகளில் கூட மைதாவின் வெண்மையான ரொட்டிஅதிகமாக இடம்பிடித்து வருகிறது. எப்போதாவது மைதா உணவு வகைகள் என்றால் பரவாயில்லை. ஆனால் அவ்வப்போது மைதா உணவுகள் எடுக்கும் போது செரிமானக் கோளாறுகள் உண்டாகிறது. கடும் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு மைதா உணவுகள் கெடுதலையே உண்டு பண்ணுகிறது.

மைதா இப்படித்தான் உருவாகிறது:
உடலுக்கு நன்மைதரும் தானியங்களில் ஒன்று கோதுமை. இந்த கோதுமையில் இருந்துதான் மைதா தயாரிக்கப்படுகிறது. ஆனால் கோதுமையில் இருக்கும் சத்துக்கள் நீக்கப்பட்டு பிரிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை. கோதுமையில் இருந்து மைதாவாக பிரித்தெடுக்கும்போது மாவு பழுப்பு நிறத்தில் இருக்கிறது. இந்த பழுப்பு நிறத்தைப் போக்கி பளீர் வெள்ளை நிறம் கொடுக்க துணிகளின் வெண்மை நிறத்துக்கு பயன்படுத்தும் பென் சைல் பெராக்ஸைடு, குளோரின் என கெடுதி தரும் பல இராசயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அலொக்ஸான் என்னும் வேதிப்பொருள் மைதாவை மிருதுவாக்கவும், சுவைக்காகவும் சேர்க்கப்படுகிறது. நாள்பட்ட மைதா கெடாமல் இருக்க மெதில் புரோமைடு என்னும் ரசாயன புகை மூட்டத்தை செலுத்தி மைதாவை பாதுகாக்கிறார்கள். இந்த கேடு தரும் ரசாயனமும், கெமிக்கல் பூச்சும் அதிகமாக உடலில் சேரும் போது பக்க விளைவுகள் உண்டாவதற்கு வாய்ப்புண்டு.

மைதாவால் உண்டாகும் நோய்கள்:
இன்று உலகில் அதிகம் பேரை பாதித்திருக்கும் நோய்களில் முக்கியமானது நீரிழிவு.அதாவது சர்க்கரை நோய். அநேகம் பேருக்கு சர்க்கரை நோயை உண்டாக்கிய பெருமை மைதாவையே சேரும் என்று சொல்லலாம். மைதாவில் சேர்க்கப்படும் அலொக்ஸான் என்னும் வேதிப்பொருள் உடலில் இன்சுலின் சுரப்பதைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் மைதாவில் தயாரித்த உணவுகள் பிரட், பேக்கரி, பரோட்ட என எதுவாக இருந்தாலும் இதை சாப்பிட்டதும் உடலில் மிகவேகமாக இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை உயர்த்துகிறது.

நார்ச்சத்து இல்லாத மைதா உணவு பொருள்கள் நிச்சயம் செரிமானத்தை எளிதாக்காது என்கிறார்கள் மருத்துவர்கள். இவை மலச்சிக்கலை உண் டாக்கிவிடும். சிலருக்கு ஆசனவாய் புற்றுநோயை ஏற்படுத்திவிடும் அபாயமும் உண்டு. இவை மட்டுமல்ல கணையம், கல்லீரல், சிறுநீரக உறுப்பு களையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.

வெளிநாடுகள் பக்கத்து மாநிலமான கேரளா மைதாவை முற்றிலும் தடைசெய்துவிட்டது குறிப்பிடத்தக்கது. அத்தியாவசியமான காய்கறிகளும், உணவுபொருள்களும் இராசயன முறையில் விளைந்துவருவதால் ஏற்படும் ஆரோக்ய குறைபாடு ஒருபுறம் என்றால் தெரிந்தே விஷமாகும் மைதாவை உங்கள் வீட்டில் அனுமதிக்காமல் இருப்பதே சிறந்தது என்கிறார்கள் அனுபமிக்க மருத்துவர்கள்.

மைதாவில் இருக்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்புகள் உடலில் தங்கும் போது இரத்த நாளங்களில் அடைப்புகளை உண்டு பண்ணுகிறது. நாளடைவில் இவை இதயம்சம்பந்தமான நோய்களையும், மாரடைப்பையும் உண்டாக்கிகிறது.குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனி என்னும் பெயரில் பேக்கரி தின்பண்டங்களை அதிகம் கொடுக்க வேண்டாம் என்று குழந்தை மருத்துவர்கள் எச்சரிப்பதும் இதனால்தான். அதிக எண்ணெயு டன் தயாரிக்கப்படும் பரோட்டாக்கள் ஆரோக்யமற்ற உடல் எடையை உண்டாக்கிவிடும்.

எதையும் அளவாக எடுத்துக்கொண்டால் அவதியில்லை என்பது வேறு. எடுக்கவே வேண்டாம் என்று திட்டவட்டமாக வலியுறுத்துவது வேறு மைதா இதில் இரண்டாவது ரகம்தான்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like